கடுமையாக சுகவீனமுற்றிருக்கும் தமிழரசுக் கட்சியின் திருமலை மாவட்ட எம். பி. இரா. சம்பந்தன் மூன்று மாத காலத்திற்கு சபைக்கு சமுகமளிக்காதிருப்பதற்கான விடு முறை பிரேரணைக்கு பாராளும ன்றம் நேற்று அங்கீகாரம் வழங்கி யது. தமிழரசுக் கட்சியின் பாராளு மன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன் சபாநாயகரின் அனுமதி யைப் பெற்று இப்பிரேரணையை சபைக்குக் கொண்டு வந்தார். இச் சமயமே பாராளுமன்றம் இப்பிரேர ணைக்கு அனுமதி வழங்கியது.
பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான ஆர ம்ப நிகழ்வைத் தொடர்ந்து சுமந்தி ரன் எம். பி. இப்பிரேரணையை சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
0 commentaires :
Post a Comment