பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோஸி ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்கல் ஆகியோர் நியுயோர்க்கில் சந்தித்து ரொமா இனத்தவர்களின் விவகாரம் தொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வந்தனர். ரொமா இனத்தவர்களை பிரான்ஸ் நடத்தும் விதம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை இவ்விரு தலைவர்களும் இணைந்து மறுப்புத் தெரிவித்தனர்.
ஐ.நா. பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் பிரத்தியேகமாகக் கலந்து கொண்ட கூட்டத்தின் போதே பிரான்ஸ், ஜேர்மன் தலைவர்கள் இந்த செய்தியை மறுத்தனர்.
பிரான்ஸிலுள்ள ரொமா இனத்தவர்கள் அரசியல் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுவதாகவும் இவர்களை ரோமானியா பல்கேரியாவுக்கு நாடுகடத்த பிரான்ஸ் ஜனாதிபதி முயல்வதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின.
இதனால் உலகெங்கும் பிரான்ஸ் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதையடுத்து ஐரோப்பிய யூனியனின் கடுமையான விமர்சனங்களை பிரான்ஸ் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இது தொடர்பாக ஜேர்மன், பிரான்ஸ் தலைவர்கள் விரிவாக ஆராய்ந்தனர். வருடமொன்றுக்கு 2500 ரொமா இனத்தவர்களை கொசோவோவுக்கு அனுப்புவதென்றும் பெரியளவிலான நாடுகடத்தல் எதுவும் இடம்பெறாதென்றும் ஏஞ்சலா மேர்கல் சொன்னார். ரொமா இனத்தவர்கள் கொசோவோவுக்கு நாடு கடத்தப்படுவதை ரோமானியா பல்கேரியா விரும்பவில்லை.
ஆனால் இவ்விரு நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் இல்லையென்பது குறிப்பிடத் தக்கது. கடந்த ஏப்ரல் மாதம் ஜேர்மன் அரசாங்கம் சேர்பியாவின் முன்னாள் மாகாணமான கொசோவோவுடன் பேச்சு நடத்தியமைக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 14 ஆயிரம் அகதிகளை நாடு கடத்துவது சம்பந்தமாகவே இப்பேச்சுக்கள் நடந்தன. ரொமா மற்றும் இரண்டாம் உலகப் போரில் அகதிகளா னோரை நிதானமாக கையாள வேண்டியுள்ளது.
0 commentaires :
Post a Comment