9/21/2010

பாரிய சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப்சுமா

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப்சுமா தலைமையில் ஆபிரிக்க காங்கிரஸ் கூட்டம் இந்த வாரம் கூடவுள்ளதாகவும் இதில் ஜனாதிபதி பல சவால்களை எதிர்கொள்ள நேரிடுமென்றும் தென்னா பிரிக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆபிரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் நிகழவுள்ளதால் இக்கூட்டம் அரசியல் வட்டாரத்தில் முக்கிய நிகழ் வொன்றாக கருதப்படுகிறது. நிலக்கரி விவகாரம், பொருளாதார நிலைமைகள் என்பனவை தென்னாபிரிக்க ஜனாதிபதியின் அரசியல் எதிர்காலத் தைக் கேள்விக் குள்ளாக்கியுள்ளன.
இரண்டாம் தவணைக்கு ஜகோப் சுமாவை ஆதரிக்கப்போவதில்லை யெனத் தெரிவித்துள்ளனர்.
மூன்று மாதங்களாக நிலக்கரித் தொழி லாளர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தத்தால் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக நலிவடைந்துள்ளது. இவர்களின் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப் படவில்லை. இதனால் 2014 ஆம் ஆண்டுவரைக்கும் பதவியிலிருக்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதியின் ஆசைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment