9/04/2010

இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்

 
 
  இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் வீ.கே. சிங் ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகளை இந்திய இராணுவத் தளபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்தியாவின் ஐந்து உயர் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பல்வேறு துறைகளைச் சார்ந்த ஐந்து இந்திய உயர் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். __

0 commentaires :

Post a Comment