9/24/2010

முதுபெரும் தலைவர் இராஜதுரை முதல்வருக்கு புகழாரம்.


img_78022   முதுபெரும் தலைவரும் முன்னாள் அமைச்சருமான    சொல்லின் செல்வர் இராஜதுரை  கிழக்கு மாகாண முதலமைச்சரின் சேவை நலனைப் பாராட்டி முதல்வர் சந்திரகாந்தனுக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தார். இன்று(22.09.2010) மட்டக்களப்பில் அவரது வீட்டில் சந்தித்து  உரையாடினார் . கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கான கட்சி என்ற அடிப்படையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சி பல சேவைகளைப் புரிந்து வருவதாகவும் மக்களின் நலனில் அக்கறை கொள்கின்ற ஓர் கட்சியாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்நது தமது ஆதரவு த.ம.வி.பு கட்சிக்கு இருப்பதாகவும் மேலும் பல சேவைகளை எமது மக்களுக்காக ஆற்ற வேண்டி இருப்பதாகவும் அதற்கு த.ம.வி.பு கட்சியுடனான உறவு வலுச்சேர்க்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.  மட்டக்களப்பு மாநகரத்தின் முதலாவது மேயரும் சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராகவும் , அமைச்சராகவும், ராஜதந்திரியாகவும்  இருந்த இராஜதுரை அவர்களின் ஆதரவு தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் அரசியல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என முதலமைச்சர் வட்டாரங்கள் தெரிவித்தன.

0 commentaires :

Post a Comment