9/17/2010

சுமந்திரனின் நியமனத்தை த.தே.கூ நிராகரிக்கும் என்று எனக்கு தெரியும்: ரணில் _

 
 
  சுமந்திரனின் நியமனத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரிக்கும் என்று எனக்கு தெரியும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கேம்பிரிட்ஜ் ரெரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற 18 ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் அமைவாக சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்க அதிகாரம் கொண்டுள்ள நாடாளுமன்ற சபைக்கு, எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாக இன்று காலை இந்த அறிவிப்பு வெளியானது.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக சுமந்திரனின் நியமனத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பதாகவும், தமக்கு அறிவிக்காமலேயே ரணில் விக்கிரமசிங்க, சுமந்திரனை நியமித்தமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ரணில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், சுமந்திரனின் நியமனத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரிக்கும் என்று எனக்கு தெரியும். எனினும் சமத்திரனுக்கு தெரியாமல் நான் பிரதிநிதியாக நியமித்தேன்.

அதாவது அண்மையில் நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற 18 ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் அமைவாக நாடாளுமன்ற பேரவைக்கு பிரதிநிதியாக எதிர் கட்சித் தலைவரால் இருவரை நியமிக்க முடியும். இதேவேளை ஜனாதிபதி இதனை நிராகரிக்கவும் முடியும். எனவே இதனை சுட்டி காட்டவே சுமத்திரனை பிரதிநிதியாக நியமித்தேன் என ரணில் மேலும் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment