9/26/2010
| 0 commentaires |
மட்/ தளவாய் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவர்கள் பராட்டி கௌரவிப்பு.
2009, 2010ம் ஆண்டிற்கான எல்லே விளையாட்டில் தேசிய மட்டம் வரைச் சென்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் நற்பெயர் ஈட்டித் தந்த வீரவீராங்கணைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலையின் அதிபர் எஸ். ரவிதேவன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் சி. சந்திரகாந்தன், மட்டக்களப்பு கல்வி வலயத்திலே மிகவும் பின்தங்கிய ஓர் பாடசாலையாகத் திகழும் இப் பாடசாலையின் சுமார் 350 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். தங்களது பாடசலைக்கு போதுமான வசதிகள் இல்லாத நிலையிலும் இம் மாணவிகள் தேசிய மட்டம் வரை எல்லே போட்டியில் பங்குபற்றிருப்பதானது அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். அத்தோடு மாவட்ட மட்டத்திலே முதலாம் இடத்தினையும் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் இவர்கள் பெற்றிருக்கின்றார்கள். அத்தோடு செல்வன் கீhத்திதரன் என்கின்ற மாணவன் உயரம் பாய்தலில் புதிய சாதனையினையும் படைத்திருக்கின்றான். இவ்வாறாக தங்களது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களைக் கௌரவிப்பதில் தான் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடாந்து அவர் குறிப்பிடுகையில,; பாடசாலைகளில் மாணவர்கள் புறக்கிருத்திய செயற்பாடுகளில் காட்டுகின்ற அக்கறையின் வெளிப்பாடுதான் இதற்கு காரணமாகும். எனவே அம்மாணவர்களது திறனறிந்த அவர்களுக்கான கற்பித்தல்களை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு ஒரு பாடசாலை சகல வழிகளிலும் முன்னேற வேண்டுமாயின் அனைவரும் ஒருமித்து உழைக்க வேண்டும். அதாவது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோhர்கள், நலன்விரும்பிகள், கிராமத்தவர்கள், பழைய மாணவர்கள் என அனைவரும் ஒரு குடும்பம் போல் செயற்பட வேண்டும். அப்போதுதான் பாடசாலை சீராக இயங்க முடியும். இப் பாடசாலையானது பல குறைபாடுகளுக்கு மத்தியிலேயே இயங்கி வருகின்றது. எதிர்வருகின்ற காலங்களில் பாடசாலைகளுக்கான உதவிகளைத் தாம் வழங்குவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் சுவாமி அஜராத்மானந்தஜி, ஏறாவூர் பற்று பிரதேச சரைத் தவிசாளர் எஸ். ஜீவரங்கன், பிரதித் தவிசாளர் எஸ்.வினோத், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. எம். ஈ. போல் மற்றும் பிற பாடசாலைகளின் அதிபர்கள், ஆசியர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment