அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வைபவங்களைப் பகிஷ்கரித்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இப்போது மனமாற்றம் ஏற்பட்டிருப்பதையே மேற்படி நிகழ்வு எடுத்துக் காட்டுகின்றது.
தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கம் நடத்தும் கூட்டங்களில் பங்குபற்றுவதெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு எடுத்திருப்பதாகத் தெரியவருகின்றது. நீண்ட காலத்துக்குப் பின் தமிழ்த் தலைவர்கள் ஆக்கபூர்வமான ஒரு முடிவை எடுத்திருப் பதையிட்டுத் தமிழ் பேசும் மக்கள் மகிழ்ச்சி அடை வார்கள் என்பது நிச்சயம்.
இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து தமிழ்த் தலை வர்கள் மிகக் கூடுதலான காலத்தை எதிர்ப்பு அரசி யலிலேயே கழித்தார்கள். இந்த அணுகுமுறை தலைவர் களுக்கு வாய்ப்பாகவே இருந்தது.
தமிழ் மக்களின் இன உணர்வைத் தூண்டும் வகையில் மேற்கொள்ளப்பட்ட அரச எதிர்ப்புச் செயற்பாடுகள் ஒவ்வொரு தேர்தலிலும் இத்தலைவர்களுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்தன. தலைவர்களின் அரசியல் அதிகாரம் தொடர்ந்து தக்க வைக்கப்பட்ட அதே நேரம் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. இனப் பிரச்சினைக்குத் தீர்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை.
மக்களுக்கு நன்மை எதுவும் கிடைக்காத போதிலும் முதல் மூன்று தசாப்த காலத்தில் இந்த அரசியல் நடைமுறை யினால் மக்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்வில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்று கூறலாம்.
ஆனால், 1977ம் ஆண்டு பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அரசியல் பிரச்சினையான இனப் பிரச் சினைக்கு இராணுவத் தீர்வு காண முற்பட்டதன் பின் விளைவாக, தமிழ்த் தலைவர்களின் எதிர்ப்பு அரசிய லினால் மக்கள் பாதிப்புகளுக்கு உட்படத் தொடங் கினார்கள்.
கடந்த மூன்று தசாப்த காலத்தில் இடம்பெற்ற உயிரிழப்புகளுக்கும் சொத்தழிவுகளுக்கும் இன்று ஏராளமானோர் இடம்பெயர்ந்து அல்லலுறுவதற்கும் தமிழ்த் தலைவர்களின் எதிர்ப்பு அரசியலே பிரதான காரணம். அரசாங்க நிகழ்வுகளில் பங்கு பற்றுவதில்லை என்ற இறுக்கமான எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓரளவாவது இறங்கி வந்திருப்பது நல்ல அறிகுறியாகவே உள்ளது.
தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் சகல பிரச்சினைகளுக்கும் நதிமூலமாக இருப்பது இனப்பிரச்சினை என்பதால், அதன் தீர்வே முன்னுரிமை பெறுகின்றது. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் இப்பிரச் சினைக்குத் தீர்வு காணும் விதத்தில் செயற்படுவதற்குக் கடமைப்பட்டுள்ளனர்.
பதவியிலுள்ள அரசாங்கத் துடனான கருத்துப் பரிமாறலைத் தவிர, இன்றைய நிலையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு வேறுவழி இல்லை. எனவே, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு இறுக்கமான நிலைப்பாட்டைக் கைவிட்டு, நடைமுறைச் சாத்தியமான முறையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அரசாங் கத்துடன் தொடர்ச்சியான கருத்துப் பரிமாறலில் ஈடுபடு வதற்கு முன்வர வேண்டும். இதுதான் தமிழ் மக்களுக்கான விமோசனப் பாதை.
0 commentaires :
Post a Comment