9/02/2010

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புட்டின்


ரஷ்யாவில் 2012ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ரஷ்ய பிரதமர் விளாதிமிர் புட்டின் தெரிவித்தார். பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் மீண்டும் ஜனாதிபதியாக தான் விரும்புவதாகக் கூறினார். 2000ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை புட்டின் ரஷ்ய ஜனாதிபதியாக கடமையாற்றினார்.
அந்நாட்டு அரசியலமைப்பின்படி தொடர்ச்சியாக இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க முடியாது. இடையில் சேவைக்காலம் உடைக்கப்பட்ட பின்னரே மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும்.
இதனால் 2008ல் நடந்த தேர்தலில் மெத்விடிவ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் ஜனாதிபதிக்கான பதவிக் காலத்தை நான்கு ஆண்டுகளிலிருந்து ஆறு ஆண்டுகளாக நீட்டுமாறு மெத்டிவைக் கோரினார். இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக முடியாதென்ற சட்டத்தையும் இல்லாமல் செய்யப்பட்டது. இதனால் 2012 தேர்தலில் போட்டியிட புட்டின் எண்ணியுள்ளார்.

0 commentaires :

Post a Comment