9/06/2010
| 0 commentaires |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் சப்பாத்து வீச்சு
அமெரிக்கா மற்றும் ஈராக் கூட்டுப்படைகள் கடந்த 2003ம் ஆண்டு ஈராக் மீது போர் தொடுத்து, அந்த நாட்டின் அதிபர் சதாம் உசேனை பதவியில் இருந்து அப்புறப்படுத்தின.
பின்னர் அவர் தூக்கிலிடப்பட்டார். ஈராக் மீது போர் தொடுத்ததற்காக அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், இங்கிலாந்து பிரதமராக இருந்த டோனி பிளேயர் ஆகியோருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
பிரதமர் பதவிக்காலம் முடிந்த டோனி பிளேயர் தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி உள்ளார்.
சில இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கையெழுத்திட்ட புத்தகங்கள் வாசகர்களுக்கு விற்கப்படுகின்றன.
இதற்காக அயர்லாந்து தலைநகர் டப்ளினில் உள்ள ஒரு புத்தக கடைக்கு நேற்று டோனி பிளேயர் வந்தார். புத்தகம் வாங்குவதற்காக அங்கு எராளமான பேர் கூடி இருந்தனர்.
அப்போது வந்த போர் எதிர்ப்பாளர்கள் டோனி பிளேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஈரான் மீது போர் தொடுத்ததாக கூறி டோனி பிளேயருக்கு எதிராக கோஷகங்களை எழுப்பிய அவர்கள், டோனி பிளேயர் காரில் இருந்து இறங்கிய போது திடீரென்று அவர் மீது முட்டைகளை வீசினார்கள்.
‘ஷ¥’வும் வீசப்பட்டது. வேறு சில பொருட்களும் அவரை நோக்கி பறந்து வந்தன. ஆனால் எதுவும் டோனி பிளேயர் மீது விழவில்லை. பொலிஸார் டோனி பிளேயரை பாதுகாப்பாக அழை த்துச் சென்றனர்.
இதனால் மேற்கொண்டு எந்த வித அசம்பாவிதமும் நடைபெற வில்லை. பின்னர் டோனி பிளேயர் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கயில், ஆப்கானிஸ்தான், ஈராக் போருக்கு பிறகு தீவிரவாதம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுவதை மறுத்தார். தீவிரவாதம் உலக நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அப்போது அவர் கூறினார்.
0 commentaires :
Post a Comment