கடந்த 18.08.2010 அன்று வாழைச்சேனை கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன வாழைச்சேனை பேத்தாழை பிரதேசத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை சிவராஜா (வயது 53) அவரது மகன் சிவராஜா ஜீவராசா (வயது 20) மற்றும் செல்லையா மனோகரன் (வயது 45) மூன்று நபர்களும் இலங்கையின் கடற்பரப்பில் 900 மயில் தொலைவில் வைத்து சிலாபம் பகுதியியை சேர்ந்த மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.
கடலில் ஏற்பட்ட திடீர் கொந்தளிப்பின் காரணமாக தங்களது படகு திசை மாறி சென்றதாகவும், தங்களால் கடல் எல்லையினை நிர்ணயிக்க முடியாததன் காரணமாக தாங்கள் கொண்டு சென்ற உணவு மற்றும் எரிபொருட்களை பயன்படுத்தி அவை முடிவுற்ற நிலையில் முடியுமானவரை சிறியரக மீன்களை பிடித்து புசித்து உண்டு வந்ததாகவும், தெய்வாதீனமாக கடலில் பெய்த மழையின் காரணமாக அம்மழை நீரை குடிநீராக பயன்படுத்தி வந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று அப்பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சிலாப மீனவர்களால் தங்கள் காப்பாற்றப்பட்டதாகவும் அவர்களுடனே தாங்கள் தற்போது இருந்து வருவதாகவும் தங்கள் உறவினர்களுக்கு தொலைபேசிமூலம் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

வரும் பத்து நாட்களுக்குள் தாம் வீடு திரும்புவதாகவும் அறிவித்துள்ளனர்.
0 commentaires :
Post a Comment