9/07/2010

மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களுக்கும் மின்சாரம் வழங்குவதற்கு கிழக்கு மாகாண சபை விசேட திட்டம்


img_5898மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களுக்கும் மின்சாரம் வழங்குவதற்கு கிழக்கு மாகாண சபை விசேட திட்டம் ஒன்றினை ஏற்படுத்தி இருக்கின்றது. இது தொடர்பான முக்கிய கூட்டம் இன்று மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற்றது. உதவி அரசாங்க அதிபர் க. விமலநாதன் தலைமையில் இடம் பெற்ற மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்ததார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், இலங்கையில் 18 மாநகரங்கள் இருக்கின்றன. அதிலே இருளில் மிளிர்கின்ற ஒரே ஒரு மாநகர சபை மட்டக்களப்பு மாநகரசபையே தவிர வேறோன்றுமில்லை. இதற்கு முழுப்பொறுப்பினையும் மாநகர மேயர் தலைமையிலானோர் பொறுப்பேற்க வேண்டும். அத்தோடு மின்சாரசபையும் இதற்கான பொறுப்பாளிகளாக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இன்று மட்டக்களப்புச் கச்சேரியில் இடம்பெற்ற மின்சாரம் தொடர்பான கூட்டத்திற்கு மாநகர சபை சார்பாக எவரும் பிரசன்னமாயிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீன அரசின் நிதிஉதவியுடன் மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.. அதே போல் அம்பாரை மாவட்டத்திலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கவுள்ளதாவும் அவர் தெரிவித்தார். எப் பிரதேசங்களுக்கு மின்சாரம் தேவை என மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச சபை செயலாளர்கள் எதிhவருகின்ற 16ந் திகதிக்கிடையில் கிழக்கு மாகாண அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும் எனவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்திற்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பரினர்கள் , பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், மின்சாரசபையின் கிழக்கு மாகாணப் பிராந்திய முகாமையாளர்  மின்சாரசபை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment