நல்லிணக்க ஆணைக்குழுவானது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அதன் பொது அமர்வுகளை நடத்தவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 17ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை அமர்வுகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒக்டோபர் 9ம் திகதி முதல் 11ம் திகதி வரை யாழ்ப்பாணத்திலும் அமர்வுகளை நடத்த நல்லிணக்க ஆணைக் குழு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலும் நேரடி விஜயங்களை மேற்கொண்டு பொது அமர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. பொது மக்கள் காட்டும் ஆர்வத்தைக் கருத்திற்கொண்டு ஆணைக் குழுவானது தொடர்ந்தும் பொதுமக்களிடம் இருந்து மேலும் சமர்ப்பணங்களை வரவேற்கின்றது.
எவரேனும் நபரொருவர் ஆணைக் குழுவின் முன்னிலையில் சமர்ப்பணங்களைச் செய்ய விரும்பினால் அதனை கொழும்பு 7, ஹோர்ட்டன் பிளேஸ், இல. 24, லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவிக்கலாம்.
0 commentaires :
Post a Comment