வெனிசூலாவில் உள்ள மூன்று ஜெயில் களில் 4,000 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். வெனிசூலாவி லிருந்து வெளிவரும் ஈ-யுனிவர்செல் எனும் பத்திரிகையில் வெளியிடப் பட்டிருப்பதாவது, வெனிசூலாவில் உள்ள கார்கஸஸ் மாகாணம் இங்குள்ள மூன்று சிறைகளில் உள்ள கைதிகள் தாங்கள் பல வகையில் சிறைக்காவலர்களால் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், எவ் வித அடிப்படை வசதிகள் இல்லாமலும், நீதி விசாரணையை சரிவர நடத்தாமலும் வருடக்கணக்கில் சிறையில் கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதாகவும், சில சிறைச்சாலைகளில் அளவுக்கு அதிகமாக கைதிகளை அடைத்து வைத்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்நகரில் உள்ள மூன்று சிறைகளில் 4000 த்திற்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருந்தனர். கடந்த 2009ம் ஆண்டில் போதிய மருத்துவ வசதி பெறமால் 366 கைதிகள் இறந்ததாகவும் அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment