9/05/2010

சபாலிங்கத்தை கொன்றது யார் ? உண்மைகள் உறங்குவதில்லை

  பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் ரிஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் கடந்த ஞாயிறன்று (28.08.2010) இரவு 10 மணிக்கு நடைபெற்ற அரசியல் நிகழ்வில் அதன் நிர்வாகியான தர்சன் விடுதலைப் புலிகளின் பிரான்ஸ் மற்றும் சர்வதேச பொறுப்பாளராக செயற்பட்ட திரு.வேலும் மயிலும் மனோகரன் ஜி.ரி.வி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி குறித்து கருத்து கூறியபோது பிரான்சில் நடைபெற்ற சபாலிங்கம் கொலை, மற்றும் கொலைகளுக்கு இவர்கள் பதில் சொல்லவேண்டும் என்று திரு.வேலும் மயிலும் மனோகரன் மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் பணியாளர்களாக ஒருங்கிணைந்து திரு.மனோகரனுடன் செயற்பட்ட தர்சனால் முன் வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு விடுதலைப் புலிகள் தான் சபாலிங்கம் கொலையை செய்தார்கள் என்பதை உணர்த்துகின்றது. தற்போது வௌவ்வேறு திசைகளில் பயணிக்கும் இவர்கள் இத்தருணத்தில் இன்னும் பல உண்மைகளை வெளிக்கொணர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ள தர்சன் பிரெஞ்சு காவல்துறைக்கு இது தொடர்பான முறைப்பாட்டை வாக்குமூலமாக அளிப்பாரா?

0 commentaires :

Post a Comment