முதலமைச்சருடன் முக்கிய சந்திப்பு.
நாளை காலை 10.00 மணிக்கு திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளருக்குமிடையிலான முக்கிய சந்திபு;பு ஒன்று இடம்பெறவுள்ளதாக முதலமைச்சரின் ஊடகச் செயலாள் ஆ.தேவராஜா தெரிவித்துள்ளார்.
இவ் முக்கிய கலந்துரையாடலில் குறிப்பாக கிழக்கு மாகாண சபையின் முன்னெடுப்புக்கள் மற்றும் மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் அத்தோடு தற்போது கிழக்கு மாகாணத்தில் மீளக்குடியேறியுள்ள மக்களுக்களுக்கான வீடுகள் அமைப்பது தொடர்பாகவும் விரிவாக பேசப்படும். மேலும் தற்போது எல்லோராலும் பேசப்பட்டு கொண்டிருக்கும் அரசியல் அமைப்பு திருத்தச் சட்ட மூலம் குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 commentaires :
Post a Comment