கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி பெண் உறுப்பினராக திருமதி.ஆரியவதி கலப்பதி மாகாண சபை பிரதி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட திருமதி.ஆரியவதி கலப்பதி மேற்படி சபை பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதி தலைவராக இருந்த திரு.எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதனையடுத்து மேற்படி வெற்றிடம் ஏற்பட்டது. அவ் வெற்றிடத்திற்கே திருமதி.ஆரியவதி கலப்பதி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment