அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை 92 மேலதிக வாக்குகளால் நேற்று சபையில் நிறைவேறியது.
அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 112 வாக்குகளும், எதிராக 20 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
இப்பிரேரணைக்கு ஆதரவாக ஆளும் கட்சியுடன் இணைந்து அரசுடன் சேர்ந்துள்ள ஐ.தே.க. எம். பி.க்களும் ஆதரவாக வாக்களித்தனர்.
இப்பிரேரணைக்கு எதிராக தமிழரசுக் கட்சி, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு எம். பி.க்களுடன் ஐ. தே. க. வின் சில எம். பி. பிக்களும் சேர்ந்து வாக்களித்தனர்.
ஐ. தே. க. எம்.பிக்களான ஜோசப் மைக்கல் பெரேரா, லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது தங்கள் ஆசனங்களில் அமர்ந்தி ருந்தனர்.
0 commentaires :
Post a Comment