9/25/2010

பாகிஸ்தானின் பெண் விஞ்ஞானி ஆபியா சித்திகாவுக்கு நியூயோர்க் நீதிமன்றம் 86 வருட சிறைத்தண்டனை

பாகிஸ்தானின் பெண் விஞ்ஞானி ஆபியா சித்திகாவுக்கு நியூயோர்க் நீதிமன்றம் 86 வருட சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அமெரிக்க அதிகாரிகளை கைத் துப்பாக்கியினால் கொலை செய்ய முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கின் முடிவின் போதே நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது. 38 வயதான பாகிஸ்தானின் பெண் விஞ்ஞானி ஆபியா சித்திகா 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அல்கைதாவுக்கு அணு தொடர்பான தகவல்களை வழங்கிய சந்தேகத்தின் பேரில் கைதான இவர், ஆப்கானிஸ்தானில் நேட்டோப் படையினரால் விசாரிக்கப்பட்டு வந்தார். விசாரணையிலீடுபட்டிருந்த எப்.பி.ஐ. அதிகாரிகளையும் நேட்டோப்படை உயரதிகாரிகளையும் கொலை செய்யும் நோக்குடன் சிறையிலிருந்த வேளை கைத்துப்பாக்கியை களவாடியதாகவும் ஆயிஷா சித்திகா மீது குற்றம்சாட்டப் பட்டது.
இவ்வருடம் பெப்ரவரியில் இச்சம்பவம் இடம்பெற்றது. இதையடுத்து பெண் விஞ்ஞானி ஆபியா சித்திகா அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டார். இந்த வழக்கை நியூயோர்க் நீதிமன்றம் விசாரணை செய்துவந்த வேளை கடந்த வியாழக்கிழமை இந்தத் தீர்ப்பு வெளியானது. இதையடுத்து இப்பெண் விஞ்ஞானியின் சொந்த இடமான கராச்சியில் வன்முறைகள் வெடித்தன. அமெரிக்க பாகிஸ்தான் கொடிகள் எரிக்கப்பட்டன. அரச கட்டடங்கள் சேதமாக்கப்பட்டன. ஆபியா சித்திகாவை விடுதலை செய்யுமாறும் பொதுமக்கள் கோஷமெழுப்பினர். லாஹ¥ரிலும் தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி ரிச்சார்ட் பேர்மன் கூறியதாவது, அல்கைதாவுடனான தொடர்பு கொலை முயற்சி இவைகளுக்காக இந்தக் கடுமையான தீர்ப்பையளிக்கிறேன் என்றார். ஆபியா சித்திகாவின் இத்தீர்ப்புக்கு முன்னர் வழக்கறிஞர்கள் நீதிமன்றில் ஆக்ரோஷமாக வாதாடினர்.
மூன்று குழந்தைகளின் தாயான இவரின் மீது பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆபியா சித்திகா கைத்துப்பாக்கியைக் களவாடியதற்கான நேரடிச் சாட்சியங்கள், தடயங்கள் எதுவுமில்லையென்றனர். கொடூர தீர்ப்பிலிருந்து தனது சகோதரியை விடுதலை செய்ய அனைவரும் முன்வர வேண்டுமென பெளஷியா சித்திகா தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment