வடக்கில் பெரும்போக பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பொருட்டு யாழ். அரியாலை பிரதேசத்தில் ஏர்பூட்டு விழா நாளை (28) செவ்வாய்க்கிழமை மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.
வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இம்முறை பெரும் போகத்தின் போது வடக்கில் 80 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்த வட மாகாண ஆளுநர், இதன் ஆரம்பக்கட்ட நிகழ்வாகவே இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
அரியாலை பிரதேசத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள இந்த ஏர்ப்பூட்டு விழாவில் வட மாகாணத்தைச் சேர்ந்த பெருந் தொகையான விவசாயிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
பயிர்ச் செய்கையை ஆரம்பிப்பதற்காக நிலத்தைப் பண்படுத்தும் பொருட்டு நாளை சுபவேளையில் இந்த ஏர்ப்பூட்டு வைபவம் இடம்பெறவுள்ளது.
பயிர்ச் செய்கைக்குத் தேவையான உரம் மற்றும் பொருட்டுகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆளுநர் இம்முறை பெரும் போகத்தில் அதிக விளைச்சல்களை பெற்றுக் கொள் வதற்குத் தேவையான நிலங்களும் பெற் றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட் டிக்காட்டினார். விவசாய நடவடிக்கை களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள சில காணிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
சம்பிரதாயபூர்வமான முறையில் நடை பெறவுள்ள இந்த ஏர்பூட்டு விழாவுக்கான சகல ஏற்பாடுகளையும் விவசாய அமைச்சு, வட மாகாண சபை மற்றும் அரசாங்க அதிபர் அலுவலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
0 commentaires :
Post a Comment