சூடானின் சர்ச்சைக்குரிய பிரதேசமான டர் புரில் நடந்த மோதல்களில் 43 பேர் கொல்லப் பட்டனர்.
ஒருவாரமாக நடந்த மோதலிலே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன கடந்த சனிக் கிழமை டர்புரிலுள்ள அகதிமுகாமிலும் தாக் குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 06 பேர் பலியாகினர்.
டர்புரின் பல பாகங்களிலும் இந்த மோதல் கள் நடந்தன. அங்குள்ள பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே இம்மோதல்கள் நடந்ததாக ஆபிரிக்க யூனியன் அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறு இந்த வன்முறைகள் ஏற்பட்ட தென்பது தெரியாதென்று ஆபிரிக்க யூனியன் அமைதிப்படையின் பேச்சாளர் சொன்னார். அகதி முகாமில் அரச படைகளே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக டர்புர் போரா ளிகள் குழுவின் தலைவர் ஒருவர் குறிப் பிட்டார்.
டர்புரில் அங்கு முகாம்களுள்ள பிரதேசங் களை மோதல் தவிர்ப்பு பிரதேசங்களாக ஐ.நா. பாதுகாப்புச் சபை அறிவித்த பின்னரே இம் மோதல்கள் நடந்துள்ளன.
டர்புர் போராளிகளுக்கும் சூடான் அரசுக் குமிடையே சமாதான பேச்சுவார்த்தை எகிப்தில் நடைபெற்று வருகின்றது. இதில் சில போராட்ட அமைப்புகள் கலந்துகொள்ள வில்லை.
0 commentaires :
Post a Comment