9/22/2010

தஜிகிஸ்தானில் தாக்குதல்; 40 படை வீரர்கள் பலி


ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடுகளில் ஒன்று தஜிகிஸ்தான். இந்த நாட்டில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாத குழு ஒன்று நடத்திய தாக்குதலில் இராணுவ வீரர்கள் 40 பேர் பலியானார்கள்.
தஜிகிஸ்தான் இராணுவ வீரர்கள் சென்ற ஒரு வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் அந்த இடத்திலேயே 23 வீரர்கள் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 17 பேர் பிற்பாடு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. 10 பேர் காயத்துக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தலைநகர் துஷான்பேயில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 25 பேர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் தப்பி ஓடிய ஒரு வாரத்துக்கு பிறகு இந்த தாக்குதல் நடந்தது.
இஸ்லாமிய தீவிரவாதிகள் உள்நாட்டு போரை, கடந்த 1997 ஆம் ஆண்டு கைவிட்டனர். ஆயுதங்களை கீழே போட்டனர். ஆனால் முன்னாள் எதிர்க் கட்சி தலைவர் முல்லோ அப்துல்லோ ஆயுதங்களை கீழே போட வில்லை. ஆனால் அவர் பிடிபட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். பிறகு விடுதலையான அவர் 100 ஆதரவாளர்களுடன் டவில்டாரா மாவட்டத்தில் தஞ்சம் புகுந்தார். அங்கு இருந்தபடி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

0 commentaires :

Post a Comment