9/14/2010

கினியாவில் தேர்தல் வன்முறை: ஒருவர் பலி: 24 பேர் காயம் இரண்டாம் கட்ட வாக்களிப்பை நடத்துவதில் சிக்கல்

கினியாவில் இடம்பெற்ற வன்முறையில் ஒருவர் உயிரிழந்ததுடன் 24 பேர் காய மடைந்தனர். இரண்டு ஜனாதிபதி வேட் பாளர்களின் ஆதரவாளர்களிடையே இம் மோதல்கள் எழுந்தன. சனிக்கிழமை இந்த தேர்தல் வன்முறைகள் நடந்தன. 2008ம் ஆண்டு கினியாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பின்னர் ஜூன் மாதம் தேர்தல் நடந்தது.
இதில் முன்னாள் பிரதமர் டாலின் டயலோ இவரை எதிர்த்து அல்பா கொண்டி ஆகியோர் போட்டியிட்டனர். முதலாம் கட்ட வாக் கெடுப்பில் எவரும் பெரும்பான்மையைப் பெறாததால் செப்டம்பர் 19ம் திகதி இரண்டாம் கட்ட வாக்களிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலாம் கட்ட வாக்கெடுப்பில் ஊழல், மோசடிகள் செய்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்டதால் இரண்டு தேர்தல் அதிகாரிகளைச் சிறையிலிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்தே இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே மோதலுண்டானது. ஜூன் 27 ல் நடந்த முதல் கட்ட வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் டயாலோ 43 வீதத்தையும் கொண்டீஸ் 18 வீதத்தையும் பெற்றிருந்தனர். இதில் மோசடிகள் நடந்ததாலே இரண்டாம் கட்ட வாக்களிப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலை நாட்டில் மோதல்களை உண்டாக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனால் இயலுமான வரை மோதல், வன்முறைகளைத் தடுக்கக் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் டயாலோ வன்முறைகள் இடம்பெற்றதை ஏற்றுக் கொண்ட போதிலும் தமது ஆதரவாளர்கள் வன்முறைகளைத் தூண்டியதாக சொல்லப்படுவதை நிராகரித்தார்.

0 commentaires :

Post a Comment