புனர்வாழ்வளிக்கப்பட்ட மேலும் 2000 முன்னாள் புலி உறுப்பினர்களை விரைவில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். நேற்று வவுனியாவில் வட மாகாணத்திற்கான புனர்வாழ்வு அதிகார சபை அலுவலகத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர், சட்ட திட்டங்க ளின்றி மனிதநேய அடிப்படையில் வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செயற் திட்டங்களை முன்னெடுப்பதே அரசாங்கத் தின் நோக்கமெனவும் தெரிவித்தார்.
வவுனியாவிற்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர், வவுனியா மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர் களுக்கு நஷ்ட ஈட்டினை வழங்கியதுடன் புனர்வாழ்வு அதிகார சபையின் அலுவலகத் தையும் வவுனியா மாவட்டச் செயலகக் கட்டிடத்தில் நேற்று ஆரம்பித்து வைத்தார். பிரதியமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா, அமைச்சின் செயலாளர், புனர் வாழ்வு அதிகார சபையின் தலைவர், பணிப் பாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட உயர்மட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
0 commentaires :
Post a Comment