9/14/2010

நிருபமா 16இல் அமெரிக்கா பயணம் _

 
 
  இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், எதிர்வரும் 16ஆம் திகதி அமெரிக்கா செல்லவிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வரவிருப்பது தொடர்பான நிகழ்ச்சி நிரலை இறுதி செய்வது குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் நிருபமா பேச்சு நடத்தவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

ஒபாமா எதிர்வரும் நவம்பர் 9 முதல் 11ஆம் திகதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அவரது வருகையின்போது, இந்தியத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காகவே நிருபமா அமெரிக்கா செல்லவுள்ளதாகவும், ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விசா கட்டண உயர்வு, வெளிப்பணி ஒப்படைப்பு தடை விவகாரம், உயர் தொழில்நுட்ப ஏற்றுமதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் அமெரிக்க அதிகாரிகளுடன் நிருபமா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே எதிர்வரும் 20ஆம் திகதி ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நியூயோர்க் செல்லவுள்ளார். இவருடன் நிருபமாவும் அக்கூட்டத்தில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. __

0 commentaires :

Post a Comment