9/14/2010

வெனிசூலா விமான விபத்தில் 15 பயணிகள் பலி

 
 
  வெனிசூலாவின் மெனுவல் கார்லோஸ் பியார் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 15 பயணிகள் பலியாகியுள்ளனர்.

வெனிசூலா அரசுக்குச் சொந்தமான கொன்வியாசா விமான சேவையின் எடிர் 42 என்ற விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளானது.

விமானம் புறப்பட்டபோது சுமார் 47 பேர் வரை அதில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

இவர்களில் 43 பயணிகளும், 4 விமான பணியாளர்களும் அடங்குவர்.

சுமார் 25 பேர்வரை இவ்விபத்தில் உயிர் பிழைத்திருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிழைத்தவர்களில் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வெனிசூலா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி விமானமானது வெனிசூலா அரசுக்குச் சொந்தமான இரும்பு ஆலையொன்றின் நிலப்பகுதியிலேயே வீழ்ந்துள்ளது.

2008 ஆம் ஆண்டில் வெனிசூலாவில் ஏற்பட்ட விமான விபத்தொன்றில் சுமார் 46 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment