13வது ஆளுணர்கள் மாநாடு கிழக்கில்
மாகாண ஆளுநர்களின் 13 ஆவது தேசிய மாநாடு திருகோணமலையில் இன்று ஆரம்பமானது. நாட்டில் உள்ள ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இம்மாநாட்டுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம தலைமை தாங்கினார்.
இம்மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர்களில் சிலரான விமலதீர திஸநாயக்க,எம்.எஸ்.சுபைர், துரையப்பா நவரட்ணராஜா, கிழக்கு மாகாண சபை தவிசாளர் எம்.பாயிஸ் மற்றும் பிரதித் தவிசாளர் ஆரியவதி கலபதி, திருகோணமலை மாவட்ட அரச அதிபர் ரஞ்சித் சில்வா, மாகாண ஆளுநர்களின் செயலாளர்கள், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டார்கள். இம் மாநாட்டில் விசேடமாக 13வது திருத்தச் சட்டததின் பயன்பாடு குறித்து ஆராயப்படுவதோடு. கிழக்கு மாகாண சபையினை அனைத்து வகையிலும் முன்மாதிரியான மாகாண சபையாக மாற்றுவதற்கான முன்மொழிவுகளும் இம் மாநாட்டில் எடுததியம்பப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் கிழக்கு மபாகாணத்திற்கு வருகை தந்த ஆளுணர்களை வரவேற்றார்.
0 commentaires :
Post a Comment