மட்டக்களப்பில் இந்திய நிதியுதவியுடன் 10,000 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளையும் கொண்ட புதிய வைத்திய சாலையொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுகாதார அமைச்சில் நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், சுகாதார அமைச்சின் செயலாளர் ரவிரு பேரூ, இந்திய நிறுவனத்தின் தலை வர் சுனில் அகர்வால் மற்றும் இந்திய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சுகாதார, அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்த வேண்டுகோளுக்கி ணங்கவே மேற்படி வைத்தியசாலை மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
தற்போது மட்டக்களப்பில் இயங்கும் போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளைக் கருத்திற்கொண்டு அதற்குப் பதிலாக இப்புதிய வைத்தியசாலை நிறுவப்படவுள்ளது.
அத்துடன் இதுவரை காலமும் பெரும் குறைபாடாக விருந்த புற்றுநோய்ச் சிகிச்சை பிரிவொன்றும் இதனுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்ப டவுள்ளது. இந்தியாவின் என். ஐ. பீ. எச். ஐ. அபிவிருத்தி திட்ட நிறுவனமும் இந்திய வங்கியொன்றும் இணைந்தே மேற்படி நிதியுதவியை வழங்கவுள்ளன. சிறு கடன் திட்ட அடிப்படையில் இதற்கான நிதி வழங்கப்படவுள்ளது.
இதனையடுத்து சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான உயர் மட்டக் குழுவொன்று இரண்டொரு தினங்களில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேரில் விஜயம் செய்ய வுள்ளது. இக்குழு அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கையை கைய ளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 commentaires :
Post a Comment