ஒக்டோபர் 01ல் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷர்ரஃப் பாகிஸ்தானில் புதிய அரசியல் கலாசாரத்தைக் கொண்டுவரப் போவதாகவும் தெரிவித்தார்.
ஹொங்கொங்கில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் முஷர்ரஃப் இதை தெரிவித்தார். நான் விரைவில் தாயகம் செல்லவுள்ளேன். எனது வருகையை எதிரிகள் எதிர்க்கின்றனர். ஆனால் நான் பாகிஸ்தான் செல்வேன். எனக்கு அங்கு எதுவும் நடக்காது என்பதில் உறுதியாக உள்ளேன்.
எது நடந்தாலும் ஒரு முறை எதிர்கொள்ள வேண்டியுள்ளதென்றும் முஷர்ரஃப் பத்திரிகையாளரிடம் விளக்கினார். பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியான பர்வேஷ் முஷர்ரஃப் நாடு கடந்த நிலையில் பிரிட்டனில் வாழ்கின்றார். பாகிஸ்தான் வந்தால் இவருக்கெதிராக ஊழல் வழக்குகள் தொடரப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் பாகிஸ்தான் வரவுள்ளார். ஆப்கான் ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்தார். அமெரிக்கா ஒருபோதும் ஆப்கானிஸ்தானைக் கைவிடக் கூடாதென்றும் முஷர்ரஃப் சொன்னார்.
0 commentaires :
Post a Comment