9/30/2010

புனர்வாழ்வு பெற்ற 2000 பேர் விரைவில் விடுதலை அமைச்சர் டியூ

புனர்வாழ்வளிக்கப்பட்ட மேலும் 2000 முன்னாள் புலி உறுப்பினர்களை விரைவில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். நேற்று வவுனியாவில் வட மாகாணத்திற்கான புனர்வாழ்வு அதிகார சபை அலுவலகத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர், சட்ட திட்டங்க ளின்றி மனிதநேய அடிப்படையில் வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செயற் திட்டங்களை முன்னெடுப்பதே அரசாங்கத் தின் நோக்கமெனவும் தெரிவித்தார்.
வவுனியாவிற்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர், வவுனியா மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர் களுக்கு நஷ்ட ஈட்டினை வழங்கியதுடன் புனர்வாழ்வு அதிகார சபையின் அலுவலகத் தையும் வவுனியா மாவட்டச் செயலகக் கட்டிடத்தில் நேற்று ஆரம்பித்து வைத்தார். பிரதியமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா, அமைச்சின் செயலாளர், புனர் வாழ்வு அதிகார சபையின் தலைவர், பணிப் பாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட உயர்மட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
»»  (மேலும்)

கல்முனையில் இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டம்

 
 
  கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரின் நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராகவும், அவரை இடம் மாற்றுமாறு கோரியும் இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொது மக்கள் ஈடுபட்டனர்.

கல்முனை ஆதார வைத்தியசாலை விழிப்புணர்வுக் குழு என்ற அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வைத்திய அத்தியட்சகர் இதுவரை வைத்தியசாலையில் கடமைபுரிந்த 18 வைத்திய அதிகாரிகளை இடம் மாற்றியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சுமார் 3 மணிநேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
»»  (மேலும்)

அரியநேந்திரனின் சுடலைஞானம்


கடந்த கால தேர்தல்களில் எல்லாம் ஐக்கிய தேசிய கட்சிக்கு வால் பிடித்து  ரணிலை தமிழ் மக்களின் கதாநாயகனாக காட்டித்திரிந்த்வர்கள்  இந்த கூட்டமைப்பினரே ஐக்கிய தேசிய கட்சி வென்று விட்டால் ஏதோ  தமிழ் ஈழத்தை தங்க தட்டில் வைத்து கொண்டு தருவார் என்று பிரமையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே இவர்கள் நடத்திய புண்ணாக்கு அரசியலே வன்னி மக்களின் அவலநிலைக்கு அடிப்படை காரணமாகும் எல்லாம் முடிந்த பின்னர்தான் இவர்களுக்கு  சுடலை ஞானம் பிறந்திருக்கிறது
  "தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளைக் கையாளும்போது ஐக்கியத் தேசியக் கட்சி இருமுகம் காட்டுகிறது. தமிழரைத் திருப்திப்படுத்த தமிழர்களுக்கு சார்பாகவும் சிங்களவரைத் திருப்திப்படுத்த சிங்களவர்களுக்கு சார்பாகவும் பேசி, அரசியல் நடத்துகிறது."

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று ஐக்கியத் தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தமிழ் மக்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக கருத்துக்களுக்குப் பதிலளித்து இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முடிந்து விட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க எவ்வாறு கூறமுடியும்? புலிகளின் ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்ததை நாங்கள் அங்கீகரிக்கின்றோம்.

ஆனால் தமிழ்ப் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுப் போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை. இந்த ஜனநாயகப் போராட்டத்தின் வெற்றியில்தான் தமிழ்ப்பேசும் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், போராட்டத்தின் முடிவுடன் எல்லாம் முடிந்து விட்டதாக அத்தநாயக்க கூறுவது எந்த வகையில் நியாயம்?

தமிழ் மக்களை நேசிப்பதாகக் காட்டிக் கொள்ளும் ஐக்கியத் தேசியக் கட்சி இவ்வாறு கூறுவதன்மூலம் அதன் இரட்டை முகத்தை வெளிப்படுத்துகிறது" என்றார்.
»»  (மேலும்)

9/29/2010

அறளை பெயர்ந்த வயதில் உளரும் நெடுமாறன் ஏழு கோடி தமிழர்களையும் என்னவென்று எண்ணிக்கொண்டிருக்கிறார் ?

புலம் பெயர்க்கப்பட்ட தமிழர்களும் மனித உரிமை மீறல்களும் என்ற தலைப்பில் திருச்சியில் மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது.
இன்று காலை 9.30 முதல் மாலை 4.00 மணிவரை நடைபெற்ற நிகழ்வு திருச்சியில் நடைபெற்றுள்ளது.

தமிழக கல்லூரி மாணாக்கர் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில்  .நெடுமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் மாணவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார். தேசியத் தலைவரது இருப்பு தொடர்பாக மாணவர் ஒருவர் வினவியபோது பதிலுரைத்த நெடுமாறன்   இத்தகவலை உறுதிபடத் தெரிவித்தார்.
சந்திர சூரியர்கள் இருப்பது எவ்வாறு உண்மையானதோ அது போன்று தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருப்பது உண்மை. ஐந்தாம் கட்ட ஈழப்போரிற்கான தயாரிப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தலைவர் பிரபாகரன் அவர்கள் விரைவில் வெளிப்படுவார். ஈழப்போரை தலைமைதாங்கி முன்னெடுத்து தமிழீழத்தை அமைப்பார் என உறுதிபடத் தெரிவித்தார்.
»»  (மேலும்)

பொதுநலவாய விளையாட்டு வீரர்கள் இந்தியா வருகை: ஏற்பாடுகளில் திருப்தி

இந்தியாவில் முதல் முறையாக தலைநகர் டெல்லியில் வருகிற 3ந் திகதி முதல் 14ந் திகதி வரை பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன.
ஊழல், போட்டி ஏற்பாடுகளில் தாமதம், பொதுநலவாய கிராமத்தில் உள்ள குடியிருப்புகளில் சுகாதார சீர்கேடு என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் பற்றி ஒரு பக்கம் காரசாரமாக விவாதிக்கப்பட்டாலும், மறுபுறம் வெளிநாட்டு அணி வீரர்கள் தொடர்ந்து டெல்லி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, ஸ்கொட்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 550 வீர - வீராங்கனைகள், அதிகாரிகள் பொதுநலவாய போட்டியில் பங்கேற்பதற்காக டெல்லி வந்தடைந்தனர்.
இதில் தென் ஆபிரிக்கா தரப்பில் 113 பேரும், அவுஸ்திரேலிய தரப்பில் 59 பேரும், இங்கிலாந்து அணியில் 61 பேரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுநலவாய குடியிருப்பு கிராமத்தில் தங்கள் நாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை ஒன்றில் பாம்பை கண்டதாக பரபரப்பை ஏற்படுத்திய இந்தியாவுக்கான தென் ஆபிரிக்க தூதர் ஹாரிஸ் மெபுல்லோ மெஜகி, இப்போது திருப்தி அடைந்துள்ளார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை ஒன்றில் இருந்து பாம்பு வெளிப்பட்டதைப் பார்த்தேன். இதன் மூலம் எங்களது வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருந்ததால் ஏமாற்றம் அடைந்தேன். விடுதியின் அடித்தளம் மற்றும் படிகட்டுகள் முழுவதும் தண்ணீர் மூழ்கி கிடந்தன.
எங்களது மனக்குறையை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தீவிர கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளனர். எங்களது வீரர்கள் தங்கும் இடத்தை தயார் செய்து வரும் பணியாளர்கள் மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். முன்னர் பார்த்ததை விட இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு உள்ளது. பணிகளை துரிதமாக முடித்து வருகிறார்கள். விரைவில் எல்லாம் சரியாகி விடும். அதன் பிறகு எங்களது வீரர்கள் பொதுநலவாய கிராமத்தில் தங்குவார்கள் என்றார்.
இதற்கிடையே இந்தியாவின் அதிக மக்கள் தொகையால் தான் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுநலவாய விளையாட்டு சம்மேளன த்தின் தலைமை செயல் அதிகாரி மைக் ஹ¥ப்பர் கூறிய புகாருக்கு டெல்லி முதல் மந்திரி iலா தீட்சித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘அவரது கருத்து உண்மையிலேயே அரசியல் நாகரீகமற்ற இரக்கமற்ற கருத்து’ என்று கண்டித்துள்ளார்.
»»  (மேலும்)

வெனிசூலா பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி ஹிய+கோ சாவெஸ{க்கு வெற்றி

வெனிசூலாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி    ஹியூகோ சாவெஸின் கட்சி வெற்றி பெற்றது. இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம் சாவெஸின் வெனிசுலா ஐக்கிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.யு.வி) 95 ஆசனங்களைப் பெற்றதாகவும் எதிர்க்கட்சி எம்.யு.டி 63 ஆசனங்களையும் சாவெஸின் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற பி.ரி.ரி கட்சி 02 ஆசனங்களைப் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நடந்த இத்தேர்தலில் 17 மில்லியன் பேர் வாக்களித்தனர்.
66% வீதமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையிலேயே சாவெஸின் கட்சிக்கு 95 ஆசனங்கள் கிடைத்துள்ளன. பெரும்பான்மையைப் பெற வேண்டுமானால் 110 ஆசனங்களைப் பெற வேண்டும். இதனைப் பெற்றால் 2012ல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சாவெஸ் போட்டியிடவும் வெற்றி பெறவும் வாய்ப்பேற்படுமென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
வெனிசூலாவின் ஜனாதிபதியாக ஹியூகோ 2005ம் ஆண்டு பதவியேற்றார். பின்னர் 2009ல் மீண்டும் வெற்றிபெற்று ஜனாதிபதியானார். அந்நாட்டு அரசியலமைப்பின்படி இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக இருக்க முடியாது. மூன்றாவது முறையும் போட்டியிட எண்ணியுள்ள சாவெஸ் அரசியலமைப்பை மாற்றம் செய்ய எண்ணியுள்ளார். இம்மாற்றத்தைச் செய்ய பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் தேவைப்படும்.
இம்முறை தேர்தலில் சாவெஸ் 110 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மையைப் பெறுவார். பெற்றால் மீண்டும் மூன்றாவது முறையாக 2012ல் சாவெஸ் போட்டியிடுவார். தேர்தல் திணைக்களம் ஒவ்வொரு கட்சியும் பெற்ற ஆசனங்களையே வெளியிட்டது. ஆனால் ஜனாதிபதி சாவெஸ் கட்சிகள் பெற்ற வாக்குகளையும் வெளிப்படுத்தினார். 5422040 வாக்குளை பி.எஸ்.யு.வி. தனது கட்சியும் 5320175 வாக்குகளை எம்.யு.டி. பிரதான எதிர்க்கட்சியும் 520000 வாக்குகளை தன்னிலிருந்து பிரிந்துபோன பி.ரி.ரி.கட்சியும் பெற்றதெனத் தெரிவித்தார். பி.ரி.ரி பெற்ற வாக்குகள் இடதுசாரிகளின் வாக்குகளே.
எனவே எதிர்க்கட்சியான எம்.யு,டி.யுடன் இவர்கள் கூட்டுச் சேர்வது எவ்வகையிலும் நியாயமில்லை என்றும் ஜனாதிபதி சாவெஸ் சொன்னார். மூன்றாவது முறையாகப் போட்டியிட அனுமதி கோரி ஏற்கனவே நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பிலும் ஜனாதிபதி சாவெஸ் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்போது பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி சாவெஸைப் பலப்படுத்தும். தேர்தல் முறைகேடாக நடந்தது என்ற குற்றச்சாட்டையும் சிறிய பெரும்பான்மையிலான வெற்றி என்ற விமர்சனத்தையும் சாவெஸ் நிராகரித்தார். பி.ரி.ரி கட்சியின் வாக்குகளும் தன்னுடையதே. தனது கொள்கைக்குச் சார்பானதே என விளக்கினார். அமெரிக்காவுக்கு சிம்ம சொர்ப்பணமாகவுள்ள சாவெஸின் வெற்றி மேற்குலக நாடுகளை அதிரவைத்தது.
»»  (மேலும்)

மட்டு. நகரில் இந்திய உதவியுடன் ரூ. 10 ஆயிரம் மில். செலவில் நவீன வசதிகள் கொண்ட வைத்தியசாலை

மட்டக்களப்பில் இந்திய நிதியுதவியுடன் 10,000 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளையும் கொண்ட புதிய வைத்திய சாலையொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுகாதார அமைச்சில் நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், சுகாதார அமைச்சின் செயலாளர் ரவிரு பேரூ, இந்திய நிறுவனத்தின் தலை வர் சுனில் அகர்வால் மற்றும் இந்திய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சுகாதார, அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்த வேண்டுகோளுக்கி ணங்கவே மேற்படி வைத்தியசாலை மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
தற்போது மட்டக்களப்பில் இயங்கும் போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளைக் கருத்திற்கொண்டு அதற்குப் பதிலாக இப்புதிய வைத்தியசாலை நிறுவப்படவுள்ளது.
அத்துடன் இதுவரை காலமும் பெரும் குறைபாடாக விருந்த புற்றுநோய்ச் சிகிச்சை பிரிவொன்றும் இதனுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்ப டவுள்ளது. இந்தியாவின் என். ஐ. பீ. எச். ஐ. அபிவிருத்தி திட்ட நிறுவனமும் இந்திய வங்கியொன்றும் இணைந்தே மேற்படி நிதியுதவியை வழங்கவுள்ளன. சிறு கடன் திட்ட அடிப்படையில் இதற்கான நிதி வழங்கப்படவுள்ளது.
இதனையடுத்து சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான உயர் மட்டக் குழுவொன்று இரண்டொரு தினங்களில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேரில் விஜயம் செய்ய வுள்ளது. இக்குழு அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கையை கைய ளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
»»  (மேலும்)

9/28/2010

5ம் ஆண்டு பலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களக்கு முதல்வர் சந்திரகாந்தன் பாராட்டு.

நடைபெற்று முடிந்த 5ம் அண்டு புலமைப் பரிசில் பரீட்சையல் சித்தியடைந்த மாணவர்களை முதல்வர் சி. சந்திரகாந்தன் பாராட்டி கௌரவித்தார்.மட்ஃ வாழைச்சேனை இந்துக்கல்லூரிக்குச் சென்ற முதல்வர் அப் பாடசாலையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி அவர்களை மகிழ்வித்தார். 19 மாணவர்கள் இப் பாடசாலையில்  சித்தியடைந்தார்கள். மாவட்டத்தில் 2ம் இடத்தினையும் இப் பாடசாலையின் மாணவன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
img_9171

»»  (மேலும்)

கல்லடிக் கடற்கரையில் பல்வேறு கலாசார நிகழ்வுகள்

img_9032சர்வதேச உல்லாச தினத்தினை முன்னிட்டு பல்வேறு கலாசார நிகழ்வுகள் கல்லடிக் கடற்கரையில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சபையின் எற்பாட்டில் ஒழுங்க செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பின் பாராம்பரியங்களை பறைசாற்றுகின்ற பல்வேறு கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது. அத்தோடு இன்னிசை நிகழ்ச்சியும்; இடம்பெற்றது. பல்லாயிரக் கணக்கான மக்கள் இந்நிகழ்வுகளைக் கண்டு மகிழ்ந்தார்கள். விசேடமாக இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு முதல்வர் சந்திரகாந்தன் பெறுமதி மிக்க பரிசில்களை வழங்கி வைத்தார்.
img_9045
»»  (மேலும்)

புலிபாய்ந்தகல்லில் வைத்திய அதிகாரி அலுவலகம்

கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பரிவில் உள்ள புலிபாய்ந்தகல் எனுமிடத்தில் யுனிசெப் நிறுவனத்தின் நிதிஉதவியுடன் மேற்படி எம். ஒ. எச்.அலவலகம் அமைக்கப்பட இருக்கின்றது. சுமார் 22மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட இருக்கும் மேற்படி கட்டத்திற்கு அடிக்கல் நாட்டம் நிகழ்வு வாழைச்சேனை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அச்சுதன் தலைமையில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர் ஆகியோர் அக் கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நட்டு வைத்தார்கள். இந் நிகழ்வில் யுனிசெப் அமைப்பின் வெளிக்கள உத்தியோகஸ்த்தர், கிழக்குப் பிhந்திய சுகாதார பணிமனை அதிகாரி டாக்டர்.சதுர்முகம், பிரதேச செயலாளர் தவராஜா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.img_9102
img_9120
img_9122
img_9126
»»  (மேலும்)

சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு கல்லடிக் கடற்கரையில் சிரமதான நிகழ்வு

கல்லடிக் கடற்கரையில் சிரமதான நிகழ்வு

img_8503சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலே பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. பொருளாதார அபிவிருத்தி மற்றும் உல்வாசத்துறை அமைச்சருமான பசில் ராஜபக்ஸ அவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுதலின் பேரில் இந் நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார். அந் நிகழ்வுகளில் ஓர் அங்கமாக கல்லடி கடற்கரை சிரமதானம் செய்யப்பட்டது. இதில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான  சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு  அரம்பித்து வை த்தார்.
img_8527
img_8532
img_8540
»»  (மேலும்)

அமெரிக்காவின் வேண்டுகோளை இஸ்ரேல் நிராகரிப்பு யூதக்குடியேற்றங்களைத் தொடர அனுமதி

இஸ்ரேல் யூதக் குடியேற்றத்தின் தற்காலிக நிறுத்தம் மேலும் நீடிக்கப்பட வேண்டுமென்ற அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்த இஸ்ரேல் மீண்டும் குடியேற்ற வேலைகளைத் தொடர அனுமதியளித்ததுடன் பலஸ்தீனர்களை நேர்மையான பேச்சுவார்த்தைக்கு வருமாறு துரிதப்படுத்தியது.
இஸ்ரேல், பலஸ்தீன நேரடிப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமானதையிட்டு மேற்குக் கரை, கிழக்கு ஜெரூஸலம் போன்ற பிரதேசங்களில் இஸ்ரேல் நிறுவி வந்த யூதக்குடியேற்ற வேலைகள் பத்து மாதங்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன. இதன் கால எல்லை இம் மாதம் 26 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
எனவே மீண்டும் இக் குடியேற்றங்களைத் தொடர அனுமதியளித்துள்ள இஸ்ரேல் பலஸ்தீனர்களைத் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பும் விடுத்தது. இது தொடர்பாக இஸ்ரேலின் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹு தெரிவித்ததாவது:- யூதக்குடியேற்ற வேலைகளைத் தொடர்ந்து கொண்டு எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் தீர்வைப் பெற இஸ்ரேல் தயாராகவுள்ளதாகவும் இதற்கான அறிவுரைகளை வழங்கப் போவதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்னவகையிலேனும் யூதக்குடியேற்றங்கள் தொடர்ந்தால் பேச்சுக்கள் சாத்தியமில்லையென்பதை பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ் திட்டவட்டமாக அறிவித்தார். இந் நிலையில் யூதக்குடியேற்றக் கொள்கையில் அமெரிக்காவின் நிலைப்பாடுகள் மாறவில்லை.
பேச்சுவார்த்தைகள் இனி வருங்காலங்களில் தொடர்ந்தால் இருதரப்பினரையும் இணக்கப்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிப்போம் என வெள்ளை மாளிகையின் பேச்சாளர் குரொளஸி தெரிவித்தார். இரண்டு நாடுகள், இரண்டு தீர்வுகள் என்ற இலட்சியத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற முயற்சிப்போம் என்றார் ஹிலாரி கிளிண்டன்.
»»  (மேலும்)

புலிகளின் சட்ட விரோத காணிப் பங்கீடு ; தமது காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நாடு திரும்புவோர் முறையீடு

20 - 25 வருடங்களின் பின்னர் நாட்டுக்கு திரும்பி வருவோரின் காணிகள் சட்ட விரோதமாக வேறு சிலரால் ஆக்கிரமிக் கப்பட்டுள்ளதாக கூறும் பல முறைப்பாடுகள் வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து கிடைத்து வருவதாக மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள அரசாங்க அதிகாரிகள் தினகரனுக்குத் தெரிவித்தனர்.
மேற்படி காணிகள் புலிகளின் மாவீரர் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளதாகவும் இவ்வாறு சட்ட விரோதமாக காணியில் குடியிருந்தோருக்கு யுத்தநிறுத்த காலத்தின் போது அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அதிகாரபூர்வ காணி உறுதிகளை வழங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்த காணிகளை கைவிட்டுச் சென்றவர்களை துரோகிகளாக கருதினர். இந்தக் காணிகளை தமது இயக்கத்துக்கு மிகுந்த பங்களிப்பை வழங்கிய குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்து அக்குடும்பங்களுக்கு மாவீரர் அந்தஸ்தும் வழங்கப்பட்டது. அத்துடன் இந்தக் காணிகளுக்கு புலிகள் உறுதிகளை வழங்கினர். பின்னர் அந்தக் காணிகளுக்கு அப்போதைய அரசாங்கம் அதிகாரபூர்வ உறுதிகளை வழங்கியது.
அத்துடன் யுத்தநிறுத்த காலத்தின் போது குறிப்பிட்ட காணிகளின் மூல உறுதி ஆவணங்கள் காணிப் பதிவு அதிகாரிகளினால் உயர் மட்டத்தின் அனுமதி மற்றும் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அழிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் மேலும் கூறினர்.
இந்நிலையில் இக்காணிகளுக்கு உரிய சொந்தக்காரர்கள் நீண்ட காலத்துக்கு பின்னர் நாடு திரும்பியதும் தமது காணிகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்கின்றனர்.
நாளாந்தம் இவ்வாறான ஐந்து முறைப்பாடுகள் வரை தமக்கு கிடைப்பதாக முல்லைத்தீவு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறுகிறார்.
தமது காணிகளில் பிறர் சட்ட விரோதமாக குடியிருக்கும் நிலையில் செய்வதறியாத இவர்கள் பொலிஸ், பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவகர்களிடம் முறைப்பாடு செய்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று தெரிய வருகிறது.
குறிப்பிட்ட காணிகளில் குடியேறியுள்ள மாவீரர் குடும்பங்களுக்கு வேறு இடங்களில் காணி வழங்கப்பட்ட போதிலும் புலிகளினால் தமக்கு வழங்கப்பட்ட காணிகளையே அவர்கள் கேட்பதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
கரைச்சி பிரதேச செயலாளர் காரியாலயத்தில் “கற்றுணர்ந்த பாடங்கள்” மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு முன்னிலையில் அண்மையில் சாட்சிய மளித்த மாவீரர் குடும்ப உறுப்பினர்கள், புலிகளினால் தமக்கு வழங்கப்பட்ட காணிகளை தாம் அபிவிருத்தி செய்துள்ளதாகவும் அவற்றை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டுமானால் உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவீரர் குடும்பங்களுக்கு புலிகள் காணிகளை வழங்க முன்னர் அக்குடும் பங்களுக்கு சொந்தமாக காணிகள் இருந் ததாகவும் அவை பிரதான ஏ-9 பாதைக்கு உள்ளே தூரமாக இருப்பதால் அவர்கள் அங்கு செல்ல விரும்பவில்லை என்றும் வவுனியா மாவட்ட செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.
»»  (மேலும்)

பலாலி உயர் பாதுகாப்பு வலய பாடசாலைகள் மீளக் கையளிப்பு இருபது வருடங்களாக வேறு இடங்களில் இயங்கியவை

பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தி லுள்ள வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினரால் கல்வி நடவடிக்கைகளுக்கென கையளிக்கப்பட வுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் மீளக் கையளிக்கப்படவுள்ள இந்த பாடசாலையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் இன்று நேரில் சென்று பார்வையிடுகின்றனர்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் உட்பட அந்தப் பிரதேசத்திலுள்ள மேலும் சில பாடசாலைகளை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க, வட மாகாண அபிவிருத்திக் கான ஜனாதிபதி விசேட செயலணியின் தலைவர் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் இந்த பாடசாலையைக் கையளிக்கிறார்.
அதன் பின்னர் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி ஆகியோரிடம் இப்பாடசாலை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
1946 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை சுமார் 64 வருடம் பழைமை வாய்ந்தது என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.
பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டதை அடுத்து 1990 ஆம் ஆண்டு தொடக்கம் வசாவிளான் பாடசாலை யாழ். உரும்பிராய் பகுதியில் தற்காலிகமாக இயங்கி வருவதாகத் தெரிவித்த அவர், தற்பொழுது அங்கு 1352 மாணவர்கள் கல்வி கற்பதாகவும் குறிப்பிட்டார்.
இன்றைய நிகழ்வில் 1532 மாணவர்களும் பங்கு கொள்ளவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தப் பாடசாலை சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரவினால் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய கல்லூரியாக தரமு யர்த்தப்பட்டதாக வட மாகாண கல்விப் பணிப்பாளர் ப. விக்னேஸ்வரன் தெரிவி த்தார். இந்தப் பாடசாலை புனரமைக்கப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டிலுள்ள ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் கல்வி அமைச்சின் வேலைத் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவித் திட்டத்தினால் இந்தப் பாடசாலை புனரமைப்பு, நிர்மாணத்திட்டத்தி ற்கென 60 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாகாண கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப் படவுள்ள இத் திட்டத்தின் மூலம் சேதமடைந்த கட்டடங்கள் புனரமைக்கப்படவு ள்ளதுடன், பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆய்வு கூடங்கள், நூலகம், போன்றவை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருத்தப் பணிகள் நிறைவுற்ற பின்னர் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்த அவர், இதன் மூலம் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

9/27/2010

மட்டு.மீன்பிடி பிரதேசங்களுக்கு அமைச்சர் வி.முரளிதரன் விஜயம் _

 
 
  மட்டக்களப்பு மாவட்டத்தின் மீன்பிடித்துறையை அபிவிருத்திச் செய்யும் வகையில் புன்னைக்குடா, களுவன்கேணி, மற்றுமு; பாலையடித்தோணா ஆகிய பிரதேசங்களுக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்த மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் அப்பிரதேசங்களைப் பார்வையிட்டதுடன், மீனவர்களுடனும் கலந்துரையாடினார்.

இந்திய முதலீட்டாளர்களும் அமைச்சருடன் வருகை தந்து இப்பிரதேச மீன்படித்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அத்துடன் வாழைச்சேசையில் அமைக்கப்பட்டுள்ள மீன்பிடித்துறைமுகத்தைப் பார்வையிட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அதனை விரைவில் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் வகையில் மீனவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளும் வழங்குவதற்கான ஏற்பாடுகளில் மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் ஈடுபட்டுள்ளார்.

 
»»  (மேலும்)

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நீச்சல் போட்டியினை முதலமைச்சர் ஆரம்பித்து வைத்தார். (படங்கள் இணைப்பு)


img_84931உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வாவியில் இடம்பெற்ற நீச்சல் போட்டியினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆரம்பித்து வைப்பதை படங்களில் காணலாம்.
img_84951
img_84961


»»  (மேலும்)

மட்டு. சுற்றுலாத்தகவல் நிலையத்தை பசில் ராஜபக்ஷ திறந்து வைத்தார்

மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மானிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்தகவல் நிலையத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று காலை திறந்து வைத்தார்.

இதை திறந்து வைக்கும் வைபவத்தில் அனர்த்த நிவாரன சேவைகள் அமைச்சர் பௌசி மற்றும் கிழக்கு மகான முதலமைச்சர்  சந்திரகாந்தன் மற்றும் பிரதியமைச்சர்களான ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன் கிழக்கு மாகாண அமைச்சர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்  மாகாண ஆளுனர் அல்மிரட் மொஹான் விஜே விக்ரம உட்பட மட்டக்களப்பு மாநகர சபை மேயர் பிரதி மேயர் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

 சுற்றுலா தகவல் நிலையத்தினை திறந்து வைத்து அதன் நினைவுக்கல்லையும இதன்போது திரை நீக்கம் செய்து வைத்தனர்.

இதையடுத்து அமைச்சர் பசில் ராஜபக்ச மட்டக்களப்பு வாவியில் நடைபெற்ற  தோணி ஓட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். இதன் பின்னார் மட்டக்களப்பு பாலமீன் மடுவில் அமைக்கப்பட்டுள்ள சூழல் கற்கை நிலையம் மற்றும் சுற்றுலாத்துறையினரை கவரும் உல்லாசத்தீவு என்பவற்றையும் அமைச்சர் பசில் ராஜபக்ச திறந்து வைத்தார்.நெக்டப் திட்டத்தின் மூலம் இவை நிர்மானிக்கப்பட்டுள்ளன.
»»  (மேலும்)

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான போட் சதுரங்க போட்டியில் கிழக்கு மாகாணம் இரண்டாம் இடம்

கல்வி அமைச்சு நடத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான போட் சதுரங்க போட்டியில் கிழக்கு மாகாணத்தில் இருந்து கலந்து கொண்ட கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
நீர்கொழும்பு லோயலா கல்லூரி மண்டபத்தில் கடந்த வாரம் நடைபெற்ற மேற்படி போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் ஏ. எச். றிப்கி றிகாஸ் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். இவர் இக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயின்று வருகின்றார்.
இப் போட்டியில் முதலாம் இடத்தை வித்யாதா கல்லூரி மாணவன் கே. ஏ. பி. எம். ஆரியவசமும், மூன்றாவது இடத்தை யாழ்ப்பாணம் ஹாட்டி கல்லூரி மாணவன் ஆர். திருபரனும் பெற்றுக்கொண்டனர்.
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்களுக்கும், இவர்களுக்கு பயிற்சியினை வழங்கிய ஆசிரியர்களான அலியார் ஏ. பைஸர் மற்றும் எம். ஏ. சலாம் ஆகியோருக்கு கல்லூரி அதிபர் எம். எம். இஸ்மாயில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
»»  (மேலும்)

அமைதியா, ஜெரூஸலக் குடியேற்றமா என்பதை இஸ்ரேல் அரசாங்கம் விரைவாக தெரிவு செய்ய வேண்டும்


பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ் ஐ. நா. பொதுச் சபையில் உரையாற்றுகின்றார். நேரடிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாக யூதக் குடியேற்றங்களின் தற்காலிக நிறுத்தம் நீடிக்கப்பட வேண்டுமென்கிறார்.
இஸ்ரேல் அரசாங்கம் யூதக் குடியேற்றங்களை நிரந்தரமாக நிறுத்தும் வரை அமைதி கிடையாது. அமைதியா, ஜெரூஸலக் குடியேற்றமா என்பதை இஸ்ரேல் அரசாங்கம் விரைவாக தெரிவு செய்ய வேண்டுமென ஐ. நா. வில் உரையாற்றிய பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய மஃமூத் அப்பாஸ், அமைதியைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் நாங்கள் தெளிவாகவும் உறுதியாகவுமுள்ளோம்.
இறுதியான பேச்சுவார்த்தைக்குள் நுழையத் தீர்மானித்துவிட்டோம். சர்வதேசம் எதிர்ப்பார்ப்பது போல் பலஸ்தீன அரசின் சுயாட்சியை நிறுவவும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். இரண்டு நாடுகள். இரண்டு எல்லைகள் என்பதே எங்கள் நோக்கு. ஆனால், கிழக்கு ஜெரூஸலம், மேற்குக் கரை ஆகிய பிரதேசங்களில் இஸரேலின் யூதக் குடியேற்றங்கள் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளதாகவும் மஃமூத் அப்பாஸ் உரையாற்றினார்.
மத்திய கிழக்குப் பிரச்சினைனக்கு இறுதித் தீர்வுகாண நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் 2008 ம் ஆண்டு தடைப்பட்டன. காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாலும், கிழக்கு ஜெரூஸலம், மேற்குக் கரை என்பவற்றில் இஸ்ரேலின் திட்டமிட்ட யூதக் குடியேற்றங்கள் தொடர்ந்ததாலும் இந்தப் பேச்சுக்கள் தடைப்பட்டன.
பின்னர் 2010 ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் எகிப்து, அமெரிக்கா முன்னெடுத்த முயற்சிகளால் இஸ்ரேல், பலஸ்தீனர்களிடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஆரம்பமான இந்த மறைமுகப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க, எகிப்து அதிகாரிகள் இஸ்ரேல், பலஸ்தீன் சார்பாகப் பங்கேற்றனர். இதை முன்னிட்டு பத்து மாதங்களுக்கு இஸ்ரேலின் திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
செப்டம்பர் 26 வரை இதன் கால எல்லையாகும். மறைமுகப் பேச்சுக்கள் எதிர்பார்த்த திருப்தியளித்ததால் நேரடிப் பேச்சுக்கள் ஆரம்பமாகின. இதில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹு. பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ், எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோர் பங்கேற்றனர். ஐ- நா. வின் 65 வது பொதுக் கூட்டம் ஆரம்பமானதையடுத்து மூன்றுவாரங்களுக்கு மத்திய கிழக்கு நேரடிப் பேச்சுக்கள் இடை நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் யூதக் குடியேற்றங்களை நிறுத்தி வைக்க இஸ்ரேல் விடுத்த கால எல்லையும் (செப். 26) முடிவடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ் ஐ. நா. வில் உரையாற்றியுள்ளார். இஸ்ரேலின் யூதக் குடியேற்ற நிலைப்பாடு, பலஸ்தீனர்களின் எதிர்காலத் தலைநகர் ஜெரூஸலம் என்ற கொள்கைக் கிடையில் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்க ஜனாதிபதி பெரும்முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளார். சமாதானம் நிச்சயத்தன்மையிலிருந்து தூரத்திலுள்ளதாக இஸ்ரேல், பலஸ்தீனத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
செப்டம்பர் 26 ற்குப் பின்னர் இஸ்ரேல் குடியேற்றங்கள் மீண்டும் தொடருமா, இல்லையா என்பது பற்றி இஸ்ரேல் பிரதமரிடமிருந்து தெளிவான வார்த்தைகள் இது வரைக்கும் வெளியாகவில்லை. இதுவரை குடியேற்றப்பட்ட முப்பதாயிரம் யூதர்களும் பலஸ்தீனர்களின் அதிகாரத்துக்குள் வரவேண்டுமென்கிறார் அப்பாஸ்.
»»  (மேலும்)

வடக்கில் 80 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக பயிர்ச் செய்கை ஆரம்பம் யாழ். அரியாலையில் நாளை ஏர்பூட்டு விழா

வடக்கில் பெரும்போக பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பொருட்டு யாழ். அரியாலை பிரதேசத்தில் ஏர்பூட்டு விழா நாளை (28) செவ்வாய்க்கிழமை மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.
வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இம்முறை பெரும் போகத்தின் போது வடக்கில் 80 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்த வட மாகாண ஆளுநர், இதன் ஆரம்பக்கட்ட நிகழ்வாகவே இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
அரியாலை பிரதேசத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள இந்த ஏர்ப்பூட்டு விழாவில் வட மாகாணத்தைச் சேர்ந்த பெருந் தொகையான விவசாயிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
பயிர்ச் செய்கையை ஆரம்பிப்பதற்காக நிலத்தைப் பண்படுத்தும் பொருட்டு நாளை சுபவேளையில் இந்த ஏர்ப்பூட்டு வைபவம் இடம்பெறவுள்ளது.
பயிர்ச் செய்கைக்குத் தேவையான உரம் மற்றும் பொருட்டுகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆளுநர் இம்முறை பெரும் போகத்தில் அதிக விளைச்சல்களை பெற்றுக் கொள் வதற்குத் தேவையான நிலங்களும் பெற் றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட் டிக்காட்டினார். விவசாய நடவடிக்கை களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள சில காணிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
சம்பிரதாயபூர்வமான முறையில் நடை பெறவுள்ள இந்த ஏர்பூட்டு விழாவுக்கான சகல ஏற்பாடுகளையும் விவசாய அமைச்சு, வட மாகாண சபை மற்றும் அரசாங்க அதிபர் அலுவலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

மலேசிய பிரதமருடன் ஜனாதிபதி சந்தித்துப் பேச்சு முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பாக ஆராய்வு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலேசிய பிரதமர் அப்துல் ரஸாக்கை நியூயோர்க்கில் சந்தித்து பேசினார். மூன்று தசாப்த காலம் இடம்பெற்ற பயங்கரவாதத்தை முறியடிக்க படையினருக் கான யுத்தப் பயிற்சி மற்றும் புலனாய்வுத் துறையில் மலேசியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி அச்சமயம் மலேசிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் பாதுகாப்பு படையினரை மேலும் பலப்படுத்தும் நோக்கில் பிராந்தியத்தில் உயர்மட்ட படையினர் பயிற்சி பாடசாலையான ஸ்கயிட் படை யினர் பயிற்சி பாடசாலையில் பயிற்சியளிக்க தொடர்ந்து வாய்ப்பளிப்பதற்கு மலேசிய அரசாங்கம் இணங்குவதாக இந்த சந்திப்பின் போது மலேசிய பிரதமர் குறிப்பிட்டார்.
தற்போது இலங்கையில் முதலீடு செய்துள்ள மலேசியர்கள் பெரும்பாலும் தொலைத் தொடர்புத் துறையிலேயே முதலீடு செய்துள்ளனர். இதனை மலேசிய பிரதமரின் அவதானத்துக்கு உட்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏனைய துறைகளிலும் மலேசிய வர்த்தகர்களை முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மலேசிய பிரதமரைக் கேட்டுக் கொண்டார்.
»»  (மேலும்)

9/26/2010

விசாரணை செய்யும் அதிகாரம் நிபுணர் குழுவுக்கு இல்லை ஜனாதிபதியிடம் பான் கீ மூன் தெரிவிப்பு

இலங்கைக்கு எதிரான குற்றச் சாட்டுகளை விசாரணை செய்யும் சட்ட ரீதியான அதிகாரம் எதுவும் தமது நிபுணர் குழுவுக்குக் கிடை யாதென்று ஐக்கிய நாடுகள் சபை யின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவிடம் மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்துள்ளார்.
நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஜனாதிபதி யுடன் நடந்த சந்திப்பின்போதே பான் கீ மூன் இதனைத் தெரி வித்துள்ளார்.
இலங்கையுடனான எதர்கால உறவு எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றியே நிபுணர் குழு தமக்கு ஆலோசனை வழங்கு மென்றும், இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அதிகாரம் எதுவும் அதற்குக் கிடையாதென்றும் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் லுசியன் ராஜகருணாநாயக்க நியூயோர்க்கிலிருந்து தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்தவர்களை மீள்குடி யமர்த்துவதற்காக மேற்கொண்ட துரித நடவடிக்கைகளை ஐ. நா. செயலாளர் பாராட்டியதுடன், புலிகள் இயக்கத்தினரால் பல தசாப்தங்களாகப் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர் களுக்குப் புனர்வாழ்வளிக்க மேற் கொண்ட நடவடிக்கைகளையும் பான் கீ மூன் பாராட்டியுள்ளார்.
புத்தாயிரமாம் ஆண்டின் அபிவிரு த்தி இலக்கை அடைவதற்கான முன்னேற்றத்தையும் அதற்கான செயற்பாடுகளையும் அவர் பாராட் டியுள்ளார். அரசியல் தீர்வு, நல்லிணக் கம் மற்றும் பொறுப்புக் கூறும் தன்மை ஆகிய விடயங்கள் குறித்தும் ஜனாதிபதிக்கும் ஐ. நா. செயலாள ருக்குமிடையிலான சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நீண்ட நாளைய முரண்பாடுகளுக் கான காரணத்தையும் அவை மீண்டும் ஏற்படாதிருப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிவதற்காக பொறுப்புக் கூறும் தன்மையின் கொள்கைகளுக்கு அமைவாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல் லிணக்கம் பற்றிய ஆணைக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய ஜனாதிபதி ராஜபக்ஷ அந்தக் குழு முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிர தேசங்களுக்குச் சென்று ஆணைக்கு விசாரணை மேற்கொண்டமை குறித்தும் ஜனாதிபதி விபரித்துள்ளார். இலங்கையில் நீதியை நிலைநாட்டு வதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்து வதற்குமான தகவல்களை எந்தத் தனி நபரோ அல்லது அமைப்போ கொண்டிருந்தால் அதனைச் செவி மடுப்பதற்கு ஆணைக்குழு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி எடுத் துரைத்துள்ளார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதே சங்களிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிப்பதற்காக நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இக்குழு தனது இடைக்கால அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் தோற்கடிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களில் 90% மீள்குடி யேற்றம் நிறைவடைந்துள்ளதுடன், யுத்தத்திற்குப் பின்னரான அபி விருத்திப் பணிகள் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் சமூக, பொருளாதார அபிவிருத்தியில் ஐ. நா. சபையும் அதன் முகவர் அமைப்புகளும் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டு தேர்தல் களிலும் ஜனாதிபதிக்குக் கிடைத் துள்ள வெற்றி குறித்து ஐ. நா. செய லாளர் நாயகம் பான் கீ மூன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல் ஸ்திரத்தன்மையின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடு சிறந்த இலக்கை அடையுமென்று தெரிவித்துள்ளதுடன் தேசிய தலைவரொருவர் மூன்றிலிரண்டுக்கும் கூடுதலான பெரும்பான்மையைப் பெறுவது அரிதாகவே இடம்பெறும் எனவும் இதனை ஜனாதிபதி பெற்றிருப்பது அவரது தலைமைத்துவ தகைமைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
»»  (மேலும்)

உலக சுற்றுலா தினத்தையொட்டி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நாளை மட்டக்களப்பு மாவட்டதிதிற்கு விஜயம்.

basil-rajapaksa1 உலக சுற்றுலா தினத்தையொட்டி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நாளை 26ம் திகதி மட்டக்களப்பு மாவட்டதிதிற்கு விஜயம் செய்கிறார். அன்றைய தினம் சுமார் 10 கோடி ரூபாய் செலவிலான அபிவிருத்திப்பணிகளை அவர் ஆரம்பித்து வைப்பார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நெக்டெப் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீட்டிலிருந்து இவ்அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நகரில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வாவியோர சுவர், கல்லடி கடற்கரையில் 3 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நடைபாதைக் கூடாரம்,மற்றும் சிறுவர் விருந்தகம் உட்பட பல உல்லாசப்பயயணிகளைக் கவரும் இடங்களை அவர் திறந்து வைப்பாரென மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
»»  (மேலும்)

மட்/ தளவாய் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவர்கள் பராட்டி கௌரவிப்பு.

img_8417

2009, 2010ம் ஆண்டிற்கான எல்லே விளையாட்டில் தேசிய மட்டம் வரைச் சென்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் நற்பெயர் ஈட்டித் தந்த வீரவீராங்கணைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலையின் அதிபர் எஸ். ரவிதேவன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் சி. சந்திரகாந்தன், மட்டக்களப்பு கல்வி வலயத்திலே மிகவும் பின்தங்கிய ஓர் பாடசாலையாகத் திகழும் இப் பாடசாலையின் சுமார் 350 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். தங்களது பாடசலைக்கு போதுமான வசதிகள் இல்லாத நிலையிலும் இம் மாணவிகள் தேசிய மட்டம் வரை எல்லே போட்டியில் பங்குபற்றிருப்பதானது அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். அத்தோடு மாவட்ட மட்டத்திலே முதலாம் இடத்தினையும் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் இவர்கள் பெற்றிருக்கின்றார்கள். அத்தோடு செல்வன் கீhத்திதரன் என்கின்ற மாணவன் உயரம் பாய்தலில் புதிய சாதனையினையும் படைத்திருக்கின்றான். இவ்வாறாக தங்களது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களைக் கௌரவிப்பதில் தான் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடாந்து அவர் குறிப்பிடுகையில,; பாடசாலைகளில் மாணவர்கள் புறக்கிருத்திய செயற்பாடுகளில் காட்டுகின்ற அக்கறையின் வெளிப்பாடுதான் இதற்கு காரணமாகும். எனவே அம்மாணவர்களது திறனறிந்த அவர்களுக்கான கற்பித்தல்களை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு ஒரு பாடசாலை சகல வழிகளிலும் முன்னேற வேண்டுமாயின் அனைவரும் ஒருமித்து உழைக்க வேண்டும். அதாவது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோhர்கள், நலன்விரும்பிகள், கிராமத்தவர்கள், பழைய மாணவர்கள் என அனைவரும் ஒரு குடும்பம் போல் செயற்பட வேண்டும். அப்போதுதான் பாடசாலை சீராக இயங்க முடியும். இப் பாடசாலையானது பல குறைபாடுகளுக்கு மத்தியிலேயே இயங்கி வருகின்றது. எதிர்வருகின்ற காலங்களில் பாடசாலைகளுக்கான உதவிகளைத் தாம் வழங்குவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் சுவாமி அஜராத்மானந்தஜி, ஏறாவூர் பற்று பிரதேச சரைத் தவிசாளர் எஸ். ஜீவரங்கன், பிரதித் தவிசாளர் எஸ்.வினோத், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. எம். ஈ. போல் மற்றும் பிற பாடசாலைகளின் அதிபர்கள், ஆசியர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள்.
img_8354
»»  (மேலும்)

சிறுபான்மை மக்களுக்கான குறைந்த பட்ச அதிகாரப் பகிர்வு முறைமை மாகாண சபை - கிழக்கு மாகாண முதலமைச்சர்.

img_8280அரசியல் அமைப்புக் கற்கைகள் நிறுவனத்தின் அனுசரனையுடன் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான அமைப்பின் ஏற்பாட்டில் 13வது யாப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவது பற்றிய மாகாண செயலமர்வு மட்டக்களப்பு கோப் இன்னில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதம அதியாகக் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு  மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன், சிறுபான்மை மக்களுக்காக கொண்டுவரப்பட்ட குறைந்தபட்ச அதிகாரத் தீர்வு முறைமை இன்று நம் எல்லோராலும் பேசப்படுகின்ற 13வது அரசியல் திருத்தச் சட்டத்தின் கருவில் உருவான மாகாண சபை முறைமைதான். 1987ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வடக்கு கிழக்கிணைந்த மாகாண சபையினால் 13அரசியல் திருத்தச்  சட்டமூலத்தினை அடிப்படையாகக் கொண்டு சுயாதீனமாக இயங்க முடியாது போனது. இதற்கு அப்போதைய ஒரு சில அரசியல்வாதிகள் மற்றும் மறைமுகமாக இருந்து செயற்பட்ட போராட்ட இயக்கங்கள் காரணம் என்று கூறலாம். ஆனால் இன்று இயங்குகின்ற கிழக்கு மாகாண சபை அவ்வாறான ஒன்றல்ல. மிகவும் பல்வேறு வழிகளிலும் அல்லலுற்ற எம் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும். அவர்களுக்கான அதிகாரங்களை குறித்தொதுக்கப்பட்ட சட்டவரையறைகளுக்குள் நின்று கொண்டு பெற்று அதனூடாக சிறப்பாக செயற்பட வேண்டும் என்பதே எமது மக்களின் அவாவாகும். அதனை நிறை வேற்றுவதற்காகத்தான் கிழக்கு மாகாண சபை தற்போது மக்கள் பிரதிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இம் மாகாண சபைக்கு 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக அளிக்கப்பட்டிருக்கின்ற அதிகாரங்களை முழுமையாக பெறுவற்கு அரசியல் வாதிகள் எனத் தங்களை இனங்காட்டுவோர் கட்டாயம் ஆதரவளிக்க வேண்டும். வெறமனே பேசுவதனால் மாத்திரம் பயன் இல்லை அதனை நடைமுறைப் படுத்துவதற்கான வழிவகைகளைத் தேட வேண்டும். அப்போதுதான் எமது சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை ஓரளவேனும் வென்றெடுக்க முடியும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு கட்சி பேதங்களை மறந்து எமது சிறுபான்மை மக்களுக்களுக்கான குறைந்த பட்சத் தீர்வாக எம் கண் முன்னே இருக்கின்ற மாகாண சபையினை பலப்படுத்த அனைவரும் முன் வரவேண்டும். மாறாக சிறுபான்மை மக்கள் தொடர்பான சட்டத்திருத்தங்களை பாராளுமனறத்தில் வாக்கெடுப்பிற்காக அல்லது பரிசீலனைகளுக்காக  கொண்டுவருகின்ற போது பொறுப்பற்றவர்களைப் போன்று பாராளுமன்ற நடவடிக்கைகளலிருந்து வெளிநடப்புச் செய்வதும் சிலர் விடுமுறைகளில் நிற்பதும் தவிர்க்கப் படவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் பேசுகையில், கடந்த காலங்களில் செயற்பட்ட தமிழ் அரசியல் வாதிகள் போல் இனி மேலும் நாம் காலத்தை வீணடிக்க முடியாது. ஆரம்பத்தில் கொள்கை, கோட்பாடு, உரிமை, சமஸ்டி என்றெல்லாம் பேசியவர்களின் நிலை என்ன? அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்த விடம் அவைகளெல்லாம் எமக்கு கிடைக்காது அவைகளெல்லாம் அசாத்தியமான விடயங்கள் என்று. அப்படி இருந்தும் காலத்தினை வீணடித்த  வரலாறுகள்தான் மிச்சம். ஆனால் இவர்கள் எல்லோரும் கேட்டதற்கு அப்பால் இன்று சிறுபான்மை மக்களுக்காக இந்நாட்டில் இருக்கின்ற அதிகாரப் பகிர்வு முறை என்றால் அது மாகாண சபை முறைமைதான். இது விரும்பியோ விரும்பாமலோ எமக்குக் கிடைத்திருக்கின்றது. அதனைச் சரியாகப் பயன்படுத்துவதற்கும், அதனைப் பலப்படுத்துவதற்குமான வழிவகைகளையே நாம் தேட வேண்டும். எமக்குத் தெரிந்த அத்தோடு இலகுவாக பெறக்;கூடிய விடயங்களைப் பற்றிச் சிந்திக்காமல் இன்றும் அன்று போல் பழைய பாணியில் வேதம் ஓத நினைப்பது வேதனையளிக்கிறது. அவற்றை எல்லாம் விடுத்து தமிழ் மக்களின் அரசியல் காவலர்கள் என்பவர்கள் எம் மக்களுக்கான அதிகாரங்களைப் பெறுவதற்கு சகல வழிகளிலும் முன்வரவேண்டும். அதனை விடுத்து காலங் கடந்த ஞானம் பெற்ற ஞானிகள் போல் திரியாமல் தற்போதைய சுமுகமான சூழ்நிலையில் எமக்கான அதிகாரங்களை நாம் பேசிப் பெறுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இச் செயலமர்விற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர மேயர், உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், ஆலோசகர்கள், அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் அரசியற் துறை சார்நத மாணவர்களும் வருகைதந்திருந்தார்கள்.
img_8279
img_8268
img_8272
»»  (மேலும்)

9/25/2010

2001 செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னணியில் அமெரிக்க அரசு

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் ஈரான் அதிபரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிகாரிகள் அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.2001 செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னணியில் அமெரிக்க அரசு இருப்பதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் நம்புகிறார்கள் என ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் ஈரான் அதிபர் அஹமதிநிஜாத் குறிப்பிட்டார்.
பொருளாதார சரிவை மீட்கவே அமெரிக்க அரசில் உள்ள சில சக்திகள் அந்த தாக்குதலுக்கு ஏற்பாடு செய்ததாகவும், செப்டம்பர் 11 தாக்குதலில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அஹமதிநிஜாத் தெரிவித்தார்.
அவரது பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த இரு அமெரிக்க அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து பிரிட்டிஷ் மற்றும் இதர ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தவர்களும் உடனடியாக கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
»»  (மேலும்)

பாகிஸ்தானின் பெண் விஞ்ஞானி ஆபியா சித்திகாவுக்கு நியூயோர்க் நீதிமன்றம் 86 வருட சிறைத்தண்டனை

பாகிஸ்தானின் பெண் விஞ்ஞானி ஆபியா சித்திகாவுக்கு நியூயோர்க் நீதிமன்றம் 86 வருட சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அமெரிக்க அதிகாரிகளை கைத் துப்பாக்கியினால் கொலை செய்ய முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கின் முடிவின் போதே நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது. 38 வயதான பாகிஸ்தானின் பெண் விஞ்ஞானி ஆபியா சித்திகா 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அல்கைதாவுக்கு அணு தொடர்பான தகவல்களை வழங்கிய சந்தேகத்தின் பேரில் கைதான இவர், ஆப்கானிஸ்தானில் நேட்டோப் படையினரால் விசாரிக்கப்பட்டு வந்தார். விசாரணையிலீடுபட்டிருந்த எப்.பி.ஐ. அதிகாரிகளையும் நேட்டோப்படை உயரதிகாரிகளையும் கொலை செய்யும் நோக்குடன் சிறையிலிருந்த வேளை கைத்துப்பாக்கியை களவாடியதாகவும் ஆயிஷா சித்திகா மீது குற்றம்சாட்டப் பட்டது.
இவ்வருடம் பெப்ரவரியில் இச்சம்பவம் இடம்பெற்றது. இதையடுத்து பெண் விஞ்ஞானி ஆபியா சித்திகா அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டார். இந்த வழக்கை நியூயோர்க் நீதிமன்றம் விசாரணை செய்துவந்த வேளை கடந்த வியாழக்கிழமை இந்தத் தீர்ப்பு வெளியானது. இதையடுத்து இப்பெண் விஞ்ஞானியின் சொந்த இடமான கராச்சியில் வன்முறைகள் வெடித்தன. அமெரிக்க பாகிஸ்தான் கொடிகள் எரிக்கப்பட்டன. அரச கட்டடங்கள் சேதமாக்கப்பட்டன. ஆபியா சித்திகாவை விடுதலை செய்யுமாறும் பொதுமக்கள் கோஷமெழுப்பினர். லாஹ¥ரிலும் தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி ரிச்சார்ட் பேர்மன் கூறியதாவது, அல்கைதாவுடனான தொடர்பு கொலை முயற்சி இவைகளுக்காக இந்தக் கடுமையான தீர்ப்பையளிக்கிறேன் என்றார். ஆபியா சித்திகாவின் இத்தீர்ப்புக்கு முன்னர் வழக்கறிஞர்கள் நீதிமன்றில் ஆக்ரோஷமாக வாதாடினர்.
மூன்று குழந்தைகளின் தாயான இவரின் மீது பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆபியா சித்திகா கைத்துப்பாக்கியைக் களவாடியதற்கான நேரடிச் சாட்சியங்கள், தடயங்கள் எதுவுமில்லையென்றனர். கொடூர தீர்ப்பிலிருந்து தனது சகோதரியை விடுதலை செய்ய அனைவரும் முன்வர வேண்டுமென பெளஷியா சித்திகா தெரிவித்தார்.
»»  (மேலும்)

தலிபான்களுக்கெதிராகப் போராட சி.ஐ.ஏ.யின் கண்காணிப்பின் கீழ் இரகசிய இராணுவம்

ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் செயற்படும் அல்கொய்தா, தலீபான் இயக்கத்தினரை வேட்டையாடுவதற்காக அமெரிக்கா இரகசிய இராணுவம் ஒன்றை உருவாக்கி உள்ளது. இதில் 3 ஆயிரம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பாகிஸ்தானில் மறைந்து இருந்தபடி, அல்கொய்தா மற்றும் தலீபான்கள் அமெரிக்க இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் இராணுவம் தயங்குகிறது. அந்த நாட்டுக்குள் அமெரிக்க இராணுவம் நுழைந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் பாகிஸ்தான் அரசு அனுமதி தர மறுத்து வருகிறது.
பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத முகாம்களை அழிக்காதவரை அமெரிக்கா இந்த போரில் வெற்றி பெறமுடியாது என்று ஜனாதிபதி ஒபாமா கருதுகிறார்.
இதனால் தான் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள அல்கொய்தா, தலீபான் இயக்கத்தினர் மீது அமெரிக்கா ஆள் இல்லாத விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
ஏவுகணை தாக்குதலால் மட்டும் தீவிரவாதிகளை ஒடுக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ள அமெரிக்கா, இரகசிய இராணுவம் ஒன்றை இப்போது உருவாக்கி உள்ளது. இதில் 3 ஆயிரம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அங்கு தனியார் நடத்தும் இராணுவக் குழுக்களில் இருக்கும் வீரர்களில் இருந்து இந்த இரகசிய இராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த இராணுவத்துக்கு ‘தீவிரவாத தடுப்புக்குழு’ என்று பெயரிப்பட்டு உள்ளது. இந்த இராணுவம் அமெரிக்க உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும். இந்த இராணுவத்தில் உள்ள வீரர்கள் சிறு சிறு குழுக்களாக செயல்படுவார்கள். அவர்கள் தீவிரவாதிகளின் இருப்பிடங்களுக் குள் புகுந்து சோதனை போடுவார்கள். தீவிரவாதிகளை தேடிக் கண்டுபிடித்து கொலை செய்வார்கள்.
»»  (மேலும்)

இனங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தீர்க்க நிறுவன ரீதியான ஏற்பாடு அவசியமானது முன்னாள் அமைச்சர் பேரியல் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம்

இனங்களுக்கிடையே அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு நிறுவனமய ரீதியான ஏற்பாடொன்று அவசியமானதென்று முன்னாள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப் தெரிவித்தார்.
இனங்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்த்து அமைதியை நிலைநாட்டும் பொருட்டு இந்த அமைப்பை தேசிய ரீதியில் ஏற்படுத்த வேண்டுமென்றும் திருமதி அஷ்ரப் குறிப்பிட்டார்.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழு முன்னிலையில் அவர் நேற்று (24) பிற்பகல் சாட்சியமளித்தார்.
கொழும்பு 7, ஹோட்டன் பிளேசில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தலைமையில் இடம்பெற்ற விசாரணையில் சாட்சியமளித்த திருமதி பேரியல் அஷ்ரப், “முஸ்லிம்கள் ஏனைய இனத்தவர்களோடு சகவாழ்வுடன் வாழ தயாராக இருக்கிறார்கள். முஸ்லிம் மதத் தலைவர்களும் மெளலவிமார்களும் இதனையே வலியுறுத்துகிறார்கள்” என்று தெரிவித்ததுடன், கிழக்கில்
காணாமற்போன முஸ்லிம் இளைஞர்களைக் கண்டறிந்துகொள்வதற்கு நல்லிணக்க ஆணைக் குழு உதவ வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். கிழக்கில் கலவரத்தால் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் புலிகள் இல்லாதுபோனதன் பின்னர் திரும்பி வந்து தமது காணிகளைக் கோருகிறார்கள். எனினும் அவர்களின் காணிகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன. இவை நிவர்த்திக்கப்பட வேண்டும் என்றும் திருமதி அஷ்ரப் குறிப்பிட்டார்.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் தாம் வீடமைப்புத் திட்டமொன்றை ஆரம்பித்தபோது முஸ்லிம் என்பதால் தடுக்கப்பட்டதாகவும் ஆணைக்குழு முன்னிலையில் அளித்த சாட்சியத்தில் அவர் தெரிவித்தார்.
»»  (மேலும்)

9/24/2010

முதுபெரும் தலைவர் இராஜதுரை முதல்வருக்கு புகழாரம்.


img_78022   முதுபெரும் தலைவரும் முன்னாள் அமைச்சருமான    சொல்லின் செல்வர் இராஜதுரை  கிழக்கு மாகாண முதலமைச்சரின் சேவை நலனைப் பாராட்டி முதல்வர் சந்திரகாந்தனுக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தார். இன்று(22.09.2010) மட்டக்களப்பில் அவரது வீட்டில் சந்தித்து  உரையாடினார் . கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கான கட்சி என்ற அடிப்படையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சி பல சேவைகளைப் புரிந்து வருவதாகவும் மக்களின் நலனில் அக்கறை கொள்கின்ற ஓர் கட்சியாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்நது தமது ஆதரவு த.ம.வி.பு கட்சிக்கு இருப்பதாகவும் மேலும் பல சேவைகளை எமது மக்களுக்காக ஆற்ற வேண்டி இருப்பதாகவும் அதற்கு த.ம.வி.பு கட்சியுடனான உறவு வலுச்சேர்க்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.  மட்டக்களப்பு மாநகரத்தின் முதலாவது மேயரும் சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராகவும் , அமைச்சராகவும், ராஜதந்திரியாகவும்  இருந்த இராஜதுரை அவர்களின் ஆதரவு தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் அரசியல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என முதலமைச்சர் வட்டாரங்கள் தெரிவித்தன.
»»  (மேலும்)

பாரம்பரிய கலை இலக்கியங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை எம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். – கிழக்கு முதல்வர்.

 

img_78272மட்டக்களப்பு மாவட்ட செயலக கலாசார அலுவலகம் நடாத்திய மக்கள் கலை இலக்கிய விழா இன்று (22.09.2010) மட் மகாஜன கல்லூரி மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சு. அருமைநாயகம் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், ஒவ்வொரு சமுகத்தவர்களுக்கும் ஒவ்வொரு பாரம்பரிய கலை இலக்கிய பண்பாடு கலாசாரம் என குறித்தொதுக்கப்பட்டிருக்கிறது. அதனை அவர்கள் சரியாக பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களையே சார்ந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், கலை இலக்கியங்கள் என்பது மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்திருப்பது. விசேடமாக குறிப்பிட்ட சில கலைகளுக்கு மட்டக்களப்பு பெயர் போனது. கடந்த கால அசாதாரண சூழல் மற்றும் தற்போதைய நவீன யுகம் இவற்றிற்கிடையில் கலை இலக்கியங்கள் பாதுகாப்பதென்பது சவாலன விடயம்தான். இருந்த போதும் நகர்ப்புறங்களிலும் கிராமப் புறங்களிலும் இவ்வாறான கலை இலக்கிய நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டும். அத்தோடு இது சார்நத பல போட்டிகளை நடாத்தி பரிசில்கள் வழங்க வேண்டும். அவ்வாறே மக்களுக்கும் இதன் முக்கியத்தவத்தையும் எமது பாரம்பரியங்கள் கலாசாரங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். இதற்காக கிழக்கு மாகாண சபையுடன் இனைந்து அதிகாரிகள் மற்றும் கலைஞர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பிற்கே உரித்தான பல கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், மூத்த பல கஞைர்கள், கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் யூ. கே. வெலிக்கல, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா நெடுஞ்செலியன், கலாசார உத்தியோகஸ்த்தர் மலர்ச்செல்வன் அகியோரும் கலந்து கொண்டார்கள்.
img_78352
img_78442
img_78942
img_79102
»»  (மேலும்)

மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் கட்டிடத்திற்கான அடிக்கல் குச்சவெளியில் முதலமைச்சரால் இன்று(23.09.2010) நடப்பட்டது

இன்று மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் கட்டிடத்திற்கான அடிக்கல் திருகோணமலையின் குச்சவெளியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் நடப்பட்டது. இந்நிகழ்வில் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை, தவிசாளர் பாயீஸ், ஆரியவதி ஆகியோரும் குச்சவெளி பிரதேச செயலாளர் தவிசாளர் தௌபிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
img_7925
img_7936
img_7956
»»  (மேலும்)

நீலப்பனிக்கன் குள விவசாய வீதி

திருகோணமலை நீலப்பனிக்கன் குள விவசாய வீதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் இன்று பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில்
img_7981
img_7984
img_7986

»»  (மேலும்)

அயோத்தி தீர்ப்பு ஒத்திவைப்பு

 
இந்தியாவில், மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்ககப்பட்ட சர்ச்சைக்குரிய பாபர் மசூதி அமைந்திருந்த நிலம் யாருக்கு சொந்தம் என்கிற வழக்கின் தீர்ப்பை நிறுத்திவைக்குமாறு அலஹாபாத் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னெள கிளையில் வெள்ளிக்கிழமை வழங்கப்படுவதாக இருந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது.
தீர்ப்பை ஒத்திவைக்குமாறு கோரி ஆர்.சி. திரிபாதி என்பவர் தாக்கல் செய்த மனு மீது வரும் 28-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பாபர் மசூதி – ராமஜென்ம பூமி பிரச்சினையில் தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுநலன் கருதி, இந்தத் தீர்ப்பை ஒத்திவைக்குமாறு உத்தரவிடுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது
1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது
திரிபாதி தாக்கல் செய்த மனு இன்று வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் சுமுகமாகப் பேசித் தீர்வு காண வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும், தற்போதைய சூழ்நிலையில் தீர்ப்பு வழங்குவது பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் என்றும் வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, நாளை வெள்ளிக்கிழமை வழங்கப்பட இருந்த உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. திரிபாதியின் மனு தொடர்பாக வரும் 28-ம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்றைய உத்தரவில் கூட, உச்சநீதிமன்ற நீதிபதிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. நீதிபதிகளில் ஒருவர், இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விரும்பினார். இன்னொருவர், தீர்ப்பை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும் என்றும், அது தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு மனு அனுப்பலாம் என்றும் கருதினார். எனவே, நீதிமன்ற பாரம்பரியத்தின்படி, தீர்ப்பை ஒத்திவைக்க உத்தரவிட முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஏமாற்றமளிப்பதாக, ராமஜென்ம பூமி அமைப்பின் வழக்கறிஞர் ரஞ்சன் அக்னிஹோத்ரி, பாப்ரி நடவடிக்கைக் குழுவின் வழக்கறிஞர் ஜஃபர்யாப் ஜிலானி ஆகியோர் கருத்துத் தெரிவித்தார்கள். இரு தரப்பினரும் சுமுகமாகப் பேசித் தீர்வு காண்பதற்கான வாய்ப்புக்கள் அறவே இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்..
அயோத்தியில் உள்ள பாபர் மசூதி--ராமஜன்ம பூமி பிரச்சினை, கடந்த அறுபது ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ளது. அந்த இடத்தில் முதலில் இந்துக்களின் கடவுளான ராமர் கோயில் இருந்ததா அல்லது முஸ்லிம்களின் மசூதி இருந்ததா என்பதில் சர்ச்சை நீடிக்கிறது. கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த இடத்தில் இருந்த பாபர் மசூதி இந்து கடும்போக்குவாதிகளால் இடித்துத் தள்ளப்பட்டது.
 
»»  (மேலும்)