8/03/2010

பிரிட்டனின் அச்சு சாதனப் பொருட்களுக்கு ஈரானில் தடை; தெஹ்ரான், லண்டன் உறவில் விரிசல்


அச்சகத்துக்குப் பயன்படுத்தும் பொருட்களை இறக்குமதி செய்வதை ஈரான் அரசாங்கம் தடை செய்துள்ளது. இதன் பிரகாரம் மை, காகிதம், அச்சு இயந்திரம், ஒப்பு நோக்கும் இயந்திரம் உட்பட அச்சு சாதனப் பொருட்கள் பிரிட்டனிலிருந்து ஈரானுக்குள் வருவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஈரானின் இஸ்லாமிய கலாசார அமைச்சு இதற்கான உத்தரவை பாராளுமன்ற அனுமதியைப் பெற்ற பின்னர் பிறப்பித்தது.
எதிரி மீதான தடையை விரிவாக்கல் என்ற நோக்கின் அடிப்படையில் இந்தத் தடைகொண்டு வரப்பட்டுள்ளது. ஈரானுக்கெதிரான பொருளாதாரத்தடை ஐ. நா. வால் கொண்டுவரப்பட்ட பொழுது பிரிட்டன் இதை முழுமையாக ஆதரித்தது மட்டுமல்லாமல் ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அங்கு அமைதியைக் குலைக்கவும் பிரிட்டன் கடுமையாக முனைந்தது.
2009ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் அஹ்மெதி நெஜாத் இரண்டாவது தடவையாகவும் வெற்றி பெற்றார். இத் தேர்தல் முடிவுகளைக் குழப்ப பிரிட்டன் திட்டமிட்டு ஈரானில் கலகங்களை ஏற்படுத்தியது. இதன்போது அரச உடைமைகள் சேதமாக் கப்பட்டன. பல சொத்துக்கள் தீக்கிரை யாக்கப்பட்டன.
அவை பிரிட்டனின் தூண்டுதலால் இடம்பெற்றமை கைதா னோரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் தெரிய வந்தது. இதையடுத்து ஈரான் ஆத்திரமடைந்ததுடன் பிரிட்டனின் அச்சு சாதனப் பொருட்களையும் தடைசெய்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல்கள் ஈரானின் அனைத்து அமைச்சுக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

0 commentaires :

Post a Comment