8/23/2010

தமிழ் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் மீண்டும் அடைய முடியாத இலக்குகளைப்பற்றியே சிந்திக்கத் தூண்டுகின்றார்கள்.-- முதலமைச்சர் சந்திரகாந்தன்

img_4782img_4767
img_4767-copyஅண்மையில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலை காரணமாக இடம் பெயர்ந்து தற்போது மீளக்குடியேறிருக்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான வடமுனை கிராம மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளின் வேலைத்திட்டம் இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகான முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடமுனைக்கிராமத்தின் அபிவிருத்தித்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு பிரதேச செயலாளர் தவராஜா தலமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிடுகையில் -
  எமது தமிழ் சமூகம் காலம்காலமாக பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து மீளமுடியாத நிலையில் சிக்கித்தவிக்கின்றார்கள்.அவர்களது உடனடித்தேவைகளை இனம் கண்டு தமிழ் மக்கள் அரசியல் தலைவர்கள் என தங்களை இனம் காட்டுவோர் அம்மக்களுக்கான உதவிகளைப் புரிய வேண்டும். அவ்வாறு மட்டக்களப்பில் எந்த தமிழ் கூட்டமைப்பு அரசியல்வாதி செயற்படுகின்றார். வெறுமனவே எமது மக்களுக்கு உணர்வுகளைத் தூன்டி உணர்ச்சி வாசகங்களை சொல்லிக் கொடுத்து மீண்டும், மீண்டும் அடைய முடியாத இலக்குகளைப்பற்றியே சிந்திக்கத் தூண்டுகின்றார்கள். இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
  குறிப்பாக இவ் எல்லைக் கிராமங்களில் வசிக்கின்ற மீழ்குடியேற்றப்பட்ட மக்கள் எவ்வளவு துக்கப்படுகின்றார்கள் என்று நன்றாகவே புரியும். அதனைக் கருத்தில் கொண்டுதான் முதற்க்கட்டமாக 75 இலட்சம் ருபாய் நிதியினை ஒதுக்கீடு செய்து இன்று அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்திருக்கின்றேன். ஏதிர் வருகின்ற காலங்களில் இம் மக்களினது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் செயற்த்திட்டங்கள் மற்றும் ஏனைய முக்கிய வசதிகளான பாதை அபிவிருத்தி, போக்குவரத்து, மின்சாரம், தொழில் வாய்ப்புக்கள் என பல செயற்த்திட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றேன் எனவும் குறிபடபிட்டார்.

0 commentaires :

Post a Comment