ஏற்கனவே கொரியன் குடாவில் தென்கொரியாவும், அமெரிக்காவும் இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த கொரியன் குடாவை அடுத்தே எலோசீ உள்ளது. இதை சீனா தனக்கு உரிமை கோருவதை தாய்வான் உட்பட தென் கிழக்காசிய நாடுகள் கண்டிக்கின்றன. இதைப் பொதுவான கடற் பிரதேசமாக அறிவிக்க வேண்டுமென்பதே அந்நாடுகளின் விருப்பம்.
இவ்வாறுள்ள நிலையில் சீனா கடற்படைப் பயிற்சியில் ஈடுபடவுள்ளமை பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்வானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முன் வந்தமை, திபத் பிரதேசம் தொடர்பாக அமெரிக்காவின் போக்கு தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா இராணுவ பயிற்சிகளிலீடுபடுகின்றமை என்பவை சீனாவை ஆத்திரம் கொள்ளவைத்துள்ளது.
இதற்கு எதிர்ப்பைக் காட்டும் வகையிலே சீனா கடற்படை இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளது. இன்னும் வட கொரியத் தலைவர் சீனா வந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜுலை மாதமளவில் அமெரிக்காவும், தென் கொரியாவும் கொரியன் குடாவுக்கு நெருக்கமாகவுள்ள எலோ சீ யில் பயிற்சியிலீடுபட்டபோது சீனா கடுமையாக எதிர்த்தது.
பின்னர் அமெரிக்க, தென் கொரிய படைகள் இங்கிருந்து பின்வாங்கின. தேவையற்ற போரையும், பீதியையும் அமெரிக்கா கொரியன் பிரதேசத்தில் ஏற்படுத்துவதாக சீனா விமர்சித்தது. ஆனால் எலோ சீ யில் நீர்மூழ்கிக் கப்பலுக்கெதிரான ஏவுகணைப் பயிற்சியை செப்டம்பரில் ஆரம்பிக்கப்போவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதே காலப் பகுதியிலே சீனாவும் கடற்படைப பயிற்சியில் ஈடுபட எண்ணியுள்ளது. வட கொரியாவை எச்சரிக்கும் நோக்குடன் அமெரிக்கா பயிற்சிகளை ஆரம்பிக்கும் அதேவேளை வட கொரியாவை காப்பாற்றும் நோக்குடன் சீனா பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளது. இவ்வாறான மோதல் போக்கு கொரியன் குடாவில் எழுந்துள்ளது. கொரியன் குடாவில் தென் கொரியாவின் கப்பல் தாக்கியளிக்கப்பட்டது. மார்ச்சில் நடந்த இச் சம்பவத்தையடுத்து அமெரிக்காவும், தென் கொரியாவும் வட கொரியாவை நேரடியாகக் குற்றம் சாட்டின.
சீனா, வட கொரியாவைக் காப்பாற்றும் வகையில் நடந்து கொண்டது அன்றிலிருந்து இப் பகுதியில் போர் மூளும் நிலை யேற்பட்டது. யுரேனியம் செறிவூட்டல் விடயத்தில் வட கொரியாவை வழிக்குக் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்காமையால் அமெரிக்கா இவ்விடயத்தில் உஷாரடைந்தது. தற்போது சீனா வந்துள்ள வட கொரியாவின் தலைவர் சீன, வடகொரிய உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்ததுக்கது.
0 commentaires :
Post a Comment