8/03/2010

விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் மட்டக்களப்பில் ஆரம்பம்

 paddyமட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் டாக்டர்.ஆர்.ருஸாங்கன் தெரிவித்தார்.
வெல்லாவெளி பிரதேசத்தில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றது. அதேபோல் கொக்கொட்டிச் சோலை, வவுணதீவு, வாழைச்சேனை போன்ற இடங்களிலும் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
(கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்றுவரும் பிரதேச மட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின்போது விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்வனவு தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது)
 ஒரு மாத காலத்திற்கு இந்நடவடிக்கைகள் இடம்பெறுமெனவும் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment