மட்டக்களப்பு வாகரை கட்டுமுறிவு மற்றும் தொப்பிக்கல ஆகிய கிராமங்களுக்கான பஸ் சேவை முதற் தடவையாக கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சர் விமலவீர திஸாநாயக்க பஸ் சேவைகளை ஆரம்பித்து வைத்தார்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட மற்றும் பின் தங்கிய கிராமங்களில் போக்குவரத்து வசதியை சீர்செய்யும் திட்டத்தின் கீழ் மேற்படி பஸ் சேவை ஆரம்பிக்ப்பட்டுள்ளது.
கட்டுமுறிவிலிருந்து வாழைச்சேனை வரை மற்றும் தொப்பிக்கலயிலிருந்து கிரான் ஊடாக வாழைச்சேனை வரை இரண்டு பஸ் சேவைகள் நடத்தப்படும் என கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் யுவநாதன் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment