8/19/2010

சகல பல்கலைகளிலும் ஆங்கிலம் போதனாமொழி அடுத்த ஆண்டு முதல் நடைமுறை


அடுத்தாண்டு முதல் நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலுமுள்ள கற்கை நெறிகளில் 99 சதவீதமானவற்றின் போதனா மொழி ஆங்கிலமாக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதேநேரம் இந்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளும் ஒழுங்கு விதிகளும் துரிதமாகத் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குருநாகல் மாவட்ட ஐ. தே. க. எம்.பி தயாசிறி ஜயசேகர எழுப்பிய வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்

0 commentaires :

Post a Comment