8/19/2010

மதானியிடம் பொலிஸார் தீவிர விசாரணை


  நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானியிடம் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பெங்களூரில் 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆந் திகதி தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானியை பெங்களூர் பொலிசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அவர் கொல்லம் நீதிமன்றத்தில் சரணடைய காரில் புறப்பட்டபோது பொலிசார் அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். பின்னர் விமானம் மூலம் அவர் பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முக்கிய பிரமுகர்கள் அறையில் மதானியை சிறிது நேரம் வைத்திருந்தனர்.

மதானியை பொலிசார் நேராக பெங்களூர் முதலாவது கூடுதல் மாஜிஸ்திரேட் வெங்கடேஷ் உல்கி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

மாஜிஸ்திரேட் மதானிய்டன் பேசினார். அப்போது பொலிஸ் தரப்பில் அவரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் மதானியை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதை மாஜிஸ்திரேட் ஏற்றுக்கொண்டு மதானியை எதிர்வரும் 26ஆந் திகதி வரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தர விட்டார்.

காவலில் இருக்கும்போது அவர் பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும், தேவையான மருத்துவ வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அதன் பிறகு மதானியை பொலிசார் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

0 commentaires :

Post a Comment