நெக்டெப் திட்டத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மெற்கொள்ளப்பட்டு வருகின்ற விசேட செயற்றிட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (27.08.2010) கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் தலைமையில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக மட்டக்ளப்பு திருப்பெருந்துறையில் அமைக்கப்பட்டு வருகின்ற மிகப் பாரிய திட்டமான சுழற்சி செய்யக்கூடிய திண்மக் கழிவுகளை தரப்படுத்தும் நிலையம் அமைத்தல் தொடர்பாக பேசப்பட்டது. அத்தோடு அதனை நிருவகிப்பது எவ்வாறு என்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டு பின்னர் மட்டு மாநகர சபையே அதனைப் பொறுப்பேற்று நிருவகிப்பதாக தீர்மாணிக்கப்பட்டது. அத்தோடு இதனுடணிணைந்த வகையில் கூட்டுப் பசளை தயாரிக்கும் நிலையம், குப்பை நிரப்பம் இடம் என்பன தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் பாலமீன்மடுவில் அமைக்கப்பட்டிருக்கின்ற சூழல் கற்கை நிலையத்தினை ஒரு பதிவு செய்யப்பட்ட அப்பிரதேசத்தைச் சார்ந்த பொது அமைப்பிற்கு வழங்குவதாவும் தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு கல்லடி கடற்கரையில் அமைக்கப்பட்டு வருகின்ற சிறுவர்குளுக்கான பூங்கா மற்றும் நடைபாதை தொடர்பாகவும் பேசப்பட்டது. மேலும் மட்டு மாநகரின் பேருந்து தரிப்பிடத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற கடைத்தொகுதிகளை எவ்வாறு வழங்குவது அத்தோடு அதனை நிருவகிப்பது தொடர்பாகவும் ஆராயப்படட்;டது. மேலும் பாலமீன் மடுவிலிருந்து சவுக்கடிவரை அமைக்கப்பட்டு வருகின்ற கரையோரப்பாதைப் புணர்நிர்மான வேலைகள் தொடர்பாகவும் பேசப்பட்டது. அதேபோல் மட்டக்ளப்பிற்கான நுழைவாயில், தகவல் நிலையம் என்பன தொடர்பாகவும் ஆராய்ந்து பல்வேறு செயற்றிட்டங்களுக்கு பெரும்பாலும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏவ்வாறாயினும் 3000மில்லியன் ருபாய்க்கு மேல் மட்டக்களப்பில் பல்வேறு வேலைத்திட்டங்களை நெக்டெப் மேற்கொண்டு வருகின்றது. இதன் செயற்றிட்டக் காலம் நவம்பர் மாதம் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.
இவ் விசேட கலந்துரையாடலில் மட்டு நாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், கிழக்கு மாகாண சபை உறுப்பின் பூ. பிரசாந்தன்,நெக்டெப் திட்டப்பணிப்பாளர் எஸ்.எம். குருஸ், பிரதிதிட்டப் பணிபாளர் எஸ். சாமித்தம்பி, பிரதி மேயர் ஜோர்ஜ்பிள்ளை, ஆணையாளர் சிவநாதன் மற்றும் பல முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டார்hகள்.

0 commentaires :
Post a Comment