8/19/2010

அம்பாறை விபத்தில் காரைதீவு கணக்காய்வாளர் பலி

காரைதீவைச் சேர்ந்த கணக்காய்வு அதிகாரி வடிவேல் சிவேஸ்வரன் (வயது 49) அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியானார்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை காலை 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறைக் கச்சேரியில் அரச கணக்காய்வு பணிமனையில் தலைமை கணக்காய்வு அதிகாரியாகப் பணியாற்றும் சிவேஸ்வரன் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
அம்பாறை கச்சேரியூடாக செல்லும் அம்பாறை பண்டாரநாயக்க மகளிர் கல்லூரி வளைவில் இடம்பெற்ற வாகன விபத்தில் எதிராக வந்த கனரக ரிப்பர் (ஆளடியன்) ஒன்று கால் மீது ஏறியது. இச்சம்பவத்தில் அவர் ஸ்தலத்திலேயே மரணமானதாகத் தெரிகிறது.
மோட்டார் சைக்கிளில் சென்ற சிவேஸ்வரன் வலது பக்கம் வீழ்ந்ததும் ரிப்பர் ஏறியதனால் அதிக இரத்தம் வெளியேறி மரணமானதாக ஆரம்ப அறிக்கை தெரிவிக்கிறது. சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

0 commentaires :

Post a Comment