8/09/2010

ஹட்டனில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவிகள் நாடகம் அம்பலத்திற்கு வந்துள்ளது:

ஹட்டனில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவிகள் இருவர் கம்பளையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்கள் என்று பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமானது காதலர்களால் சோடிக்கப்பட்டதென்று பொலிஸார் மேற் கொண்ட விசாரணையைத் தொடர்ந்து தெரிய வந்துள்ளது.

பொலிஸாருக்குப் பிழையான தகவல்களை வழங்கிய மாணவிகள் இருவரும் உரிய விசாரணைக்குப்பிறகு அட்டன் நிதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து 10 ஆயிரம் ரூபா சரீர பிணையில் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.இவர்களை மீண்டும் புதன்கிழமை அட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு அட்டன் நீதிவான் உத்திரவிட்டுள்ளார்

0 commentaires :

Post a Comment