8/05/2010

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி அடைவ மட்டத்தை உயர்த்துவது தொடர்பான விசேட கருத்தரங்கு

img_2383கிழக்கு மாகாணம் பல்வேறு துறைகளிலும் குறிப்பிட்ட அளவிலான அபிவிருத்தி போக்கினை கண்டு வருகின்றது. இவ்வேளையில் கல்வி அபிவிருத்தி தொடர்பில் அதிக அக்கறை காட்டிவரும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கல்வி தொடர்பாக பல்வேறு உயர்மட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றார்.
அதன் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்கள் அனைத்திற்கும் கல்வி அடைவு மட்டத்தினை உயர்த்துவது தொடர்பான விசேட  ஆய்வுக்கருத்தரங்கினை நடாத்தி வருகின்றார். அதன் அடிப்படையில் இன்று 03.08.2010 மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கான உயர்மட்ட கலந்துரையாடல் மட் கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்றது இவ்விசேட ஆய்வுக் கருத்தரங்கிற்கு மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் போல், உதவிக்கல்வி பணிப்பாளர் சத்தியனாதன் மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் மட்டக்களப்பு கல்வியியல் கலலூரியின் பீடாதிபதி, மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குரிய அதிபர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, கல்வி பொது சாதாரணதர மற்றும் உயர்தர பெறுபேற்றின் அடைவு மட்டங்களை உயர்த்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அங்கு வருகை தந்திருந்த பாடசாலை அதிபர்கள் அனைவரும் எதிர்வரும் ஆண்டில் கல்வி அடைவு மட்டத்தினை உயர்த்துவதற்கு தாங்கள் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். இது தொடர்பில் கருத்துரைத்த முதலமைச்சர் பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கமளித்ததுடன், மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் எதிர்நோக்குகின்ற பௌதீக மற்றுமு; ஆளணி பற்றாக்குறைகள் போன்ற பிரச்சினைகளுக்கு தாம் உடனடியாக தீர்வு கண்டு தருவதாக உறுதியளித்தார்.
img_2373
Add caption

0 commentaires :

Post a Comment