8/23/2010

அவுஸ்திரேலிய பொதுத்தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை; எழுபது வருடங்களின் பின்னர் தொங்கு பாராளுமன்றம்

அவுஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெறவில்லை. ஆனால் டொனி அபொட் தலைமையிலான எதிர்க்கட்சி பிரதமர் ஜுலியட் கிலாட் தலைமையிலான ஆளும்கட்சியைவிட ஒரு ஆசனத்தைக் கூடுதலாகப் பெற்றது.
மொத்தம் 150 ஆசனங்களைத் தெரிவு செய்ய சனிக்கிழமை அவுஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் நடந்தது.
இதில் 76 ஆசனங்களைப் பெற்ற கட்சியே ஆட்சியமைக்க முடியும். ஆனால் பிரதமர் தலைமையிலான கட்சி 72 ஆசனங்களையும் எதிர்க்கட்சி 73 ஆசனங்களையும் பெற்றது. எழுபது வீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையிலே இம்முடிவுகள் வெளியாகின.
முன்னாள் பிரதமர் கெவின்ரூட்டை தண்டிக்கும் வகையில் மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் மீதமாகவுள்ள ஐந்து ஆசனங்களின் முடிவுகள் இச்செய்தி எழுதப்படும் வரை கிடைக்கவில்லை. எவ்வாறாயினும் எழுபது வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவில் தொங்கு பாராளுமன்றம் அமையுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
1932ம் ஆண்டுக்குப் பின்னர் குறுகிய கால ஆயுள் தொழிற்கட்சிக்கு கிடைத்தமை இதுவே முதற்தடவையாகும். 2007ல் நடந்த பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்று கெவின்ருட் பிரதமரானார். இரண்டு மாதங்களுக்குமுன்னர் பிரதமர் கெவின்ருட்டுக் கெதிரான எதிர்ப்புகள் கட்சிக்குள்ளும் நாட்டிலும் ஏற்பட்டது. காலநிலைமாற்றக் கொள்ளை வரிவிதிப்பு, பாதுகாப்பு, குடியேற்றக் கொள்கை தொடர்பாகவே பிரதமர் மீதான எதிர்ப்பு வலுப் பெற்றது.
இதையடுத்து கெவின்ருட் பதவி விலகி ஜுலியட் கிலாட் பிரதமரானார். அவுஸ்திரேலியவின் பெண் பிரதமர் என்ற பெருமையையும் ஜுலியட்கிலாட் பெற்றுக் கொண்டார்.
கட்சிக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி வளர்வதற்கிடையில் மீண்டுமொரு தேர்தலை ஜுலியட் கிலாட் அறிவித்தார். இதனால் அரசாங்கத்தின் ஆயுட்காலம் இடைநடுவில் துண்டிக்கப்பட்டது. தற்போது வெளியான முடிவுகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட பிரதமர் ஜுலியட் கிலாட் இனிவருங்காலம் மோசமானதாக இருக்கும்.
அரசாங்கத்தை அமைப்பதற்கான பேரம் பேசும் பேச்சுக்கள் சூடுபிடிக்கும் என்றார். எதிர்க்கட்சி வேட்பாளர் டொனி அபொட் கூறுகையில் என்ன வகையிலும் தொழிற்கட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாது. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சவார்த்தைகளில் தனது கட்சி மும்முரமாகச் செயற்படுமென்றும் டொனி அபொட் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment