இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் யுத்தத்திற்கு பின்னரான மக்களின் இயல்பு நிலைமை குறித்து முதலமைச்சரிடம் கேட்டு அறிந்து கொண்டதுடன் பிரேசில் நாட்டு முதலீட்டாளர்கள் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையிலும் சீனி உற்பத்தியிலும் முதலீடு மேற்கொள்ள ஆயத்தமாக உள்ளதாகவுமு; தூதுவர் குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கும் சமூக மேம்பாட்டிற்கும் வெளிநாட்டு முதலீடு அவசியம் என்பதுடன் இது தொடர்பில் பிரேசில் நாட்டு முதலீட்டாளர்கள் வரவேற்றப்படுவார்கள் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். இச்சந்திப்பின் போது முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.எம்.எம். ஹன்ஸீர் கலந்து கொண்டார்.
8/13/2010
| 0 commentaires |
பிரேசில் நாட்டு இலங்கைக்கான தூதர் கிழக்கு மாகாணத்திற்கு முதற்தடவையாக உத்தியோக பூர்வ விஜயம்
இலங்கைக்கான பிரேசில் நாட்டு தூதுவர் வென்ரோ வெயாரிட்டோ கிழக்கு மாகாணத்திற்கு முதற்தடவையாக உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு திருகோணமலைக்கு இன்று வருகை தந்திருந்தார். இவ்விஜயத்தின்போது பிரேசில் தூதுவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். அவர்களை முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
0 commentaires :
Post a Comment