8/19/2010

ஈராக்கில் புதிய அரசாங்கத்தை அமைக்க இறுதி முயற்சி: அல் சத்ரை சந்திக்க முடிவு சுன்னி முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவர் இயாட் அலாவி

ஈராக்கில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான மற்றுமொரு முயற்சியாக அமெரிக்க எதிர்ப்பு ஷியா அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த எண்ணியுள்ளதாக ஈராக்கின் முன்னாள் பிரதமரும் சுன்னி ஈராக் கூட்டமைப்பின் தலைவருமான இயாட் அலாவி தெரிவித்தார்.
அமெரிக்க எதிர்ப்பு ஷியா அமை ப்புக்கு முக்தடா அல் சத்ர் தலைமை வகிக்கின்றார்.
ஈராக்கில் அமெரிக்க படைகளின் பிரசன்னத்தை முக்தடா அல் சத்ர் தலைமையிலான ஷியா அமைப்பு எதிர்க்கின்றது.
இதனால் ஷியா முஸ்லிம்களின் பெரும் கட்சியான பிரதமர் நூரி அல் மாலிகியின் கட்சிக்கு ஆதரவு வழங்கப் பின்நிற்கின்றது. இதனால் ஐந்து மாதங்களாக அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியில் செல்கின்றன. இயாட் அலாவி தலைமையிலான சுன்னி முஸ்லிம்களின் கட்சியை விட பிரதமர் நூரி அல் மாலிகி தலைமையிலான ஷியா கட்சிக்கு இரண்டு ஆசனங்கள் குறைவாக உள்ளன.
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மைப் பலமில்லை. இதனால் இதர கட்சிகளை இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் இரண்டு கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க எதிர்ப்பு ஷியா தலைவர் முக்தடா அல் சத்ரின் கட்சி 40 ஆசனங்களை வென்றுள்ளது. அமையவுள்ள அரசாங்கத்தில் இவரது கட்சி முக்கிய செல்வாக்கைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எண்ணெய் ஒப்பந்தம், எரிவாயு உடன்படிக்கை உள்ளிட்ட முக்கிய உடன்படிக்கைகள் திருத்தி எழுதப்பட வேண்டுமென முக்தடாரின் கட்சி நிபந்தனை விதித்துள்ளது இவை அமெரிக்க அரசாங்கத்தின் நலன்கருதி செய்யப்பட்டுள்ளதாக முக்தடார் விமர்சிக்கின்றார். இதையடுத்தே சுன்னி முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவரான இயாட் அலாவி முக்தடாரை பேச்சுக்கு அழைக்க எண்ணியுள்ளார். ஈராக்கில் மார்ச் 07ல் பொதுத் தேர்தல் நடந்தது ஆனால் இன்னும் அரசாங்கம் அமைக்கப்படவில்லை.
ஈராக்கில் 2003 ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இராணுவ நடவடிக்கையிலீடுபட்டன. அல் கைதா, சுன்னி, ஷியா, மூன்று வகையான கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை வெளிநாட்டுப் படைகளுக்கேற்பட்டது. முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் ஆதரவாளர்கள், அமெரிக்காவை எதிர்க்கும் ஷியா முஸ்லிம் பிரிவினர், அல் கைதாவின் வெளிநாட்டுப் போராளிகள் எனப் பலவகையானோர் ஈராக் மண்ணில் வன்முறைகளிலீடுபட்டனர். இதனால் அமெரிக்க படைகள் பாரிய எதிர்ப்புகளை முகங் கொண்டு வெற்றி தோல்வியின்றி போர் தொடர்கிறது.
இந் நிலையில் 2011 ம் ஆண்டில் படைகள் முற்றாக வாபஸ் பெறப்படுமென பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். இத்தனைக்கும் இதுவரை ஈராக்கில் அரசாங்கமொன்று இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment