காத்தான்குடியில் ஷ¤ஹதாக்கள் தினம்
காத்தான்குடியில் பிரதி வருடந்தோறும் நடைபெற்று வரும் ஷ¤ஹதாக்கள் தினம் இன்று (3) அனுஷ்டிக்கப்படுகின்றது.03.08.1990ம் ஆண்டு காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல், ஹ¤ஸைனிய்யாப் பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையை நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது தொழுகையில் வைத்து 103 பேர் பயங்கரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்டனர்.
இவற்றை நினைவு கூர்ந்து இவ் ஷ¤ஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஷ¤ஹதாக்கள் தினத்தையொட்டி காத்தான்குடி மீராஜும் ஆப்பள்ளிவாசலில் இன்று காலை கதமுல குர் ஆன் பிரார்த்தனை என்பன நடைபெறவுள்ளன.
ஷ¤ஹதாக்கள் தினத்தை அமைதியாகவும், பிரார்த்தனை நாளாகவும் கழிக்குமாறு ஷ¤ஹதாக்கள் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 commentaires :
Post a Comment