8/23/2010

வடமுனை கிராம அபிவிருத்தித் திட்டங்களை கிழக்கு முதல்வர் ஆரம்பித்து வைத்தார்.

   மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமான வடமுனை மீள்குடியேற்றக் கிராமத்தின் அபிவிருத்தி வேலைகளுக்காக கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் 75 இலட்சம் ருபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார். பல் தேவைக் கட்டிடம், பாலர் பாடசாலை, பொது மலசலகூடம், போக்குவரத்திற்கான சிறிய ரக உழவு இயந்திரம், விவசாய பொதுக் கிணறு, கால் நடை வளர்ப்பு, நன்னீர் மீன்பிடி, தொழிலாளர்களுக்கு தோணிகள்மற்றும் வலைகள் என்பன இதனுள் உள்ளடக்கப் பட்டிருக்கின்றன. இக்கிராமத்தின் அபிவிருத்தித் திட்டங்களை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று பிரதேச செயலாளர் தவராஜா தலமையில் இடம் பெற்றது. முதலமைச்சர் சந்திரகாந்தன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கோரளைப்பற்று பிரதேச தவிசாளர் உதயஜீவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
img_4688

0 commentaires :

Post a Comment