ஜேர்மன் இராணுவமும் விரைவில் வாபஸ்பெறப்படவுள்ளதாக பின்னர் கிடைத்த செய்திகள் தெரிவித்தன. ஆப்கானிஸ்தானில் இரண்டாயிரம் நெதர்லாந்து இராணுவம் கடமையாற்றியது. 2006ம் ஆண்டு இப்படை இங்கு வந்தது. தலிபான்களின் பலம் ஓங்கியுள்ள உர்கிஸ்தான் மாகாணத்தில் அமெரிக்கா அவுஸ்திரேலிய படைகளுடன் இணைந்து நெதர்லாந்து இராணுவம் கடமையாற்றியது.
இதுவரை 24 இராணுவம் கொல்லப்பட்டதுடன் 140 நெதர்லாந்து இராணுவத்தினர் காயமடைந்தனர். முன்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட கால எல்லைக்கும் மேலாக இன்னும் 12 மாதங்களுக்கு கடமையாற்றுமாறு நேட்டோ தலைமை விடுத்த வேண்டுகோளை நெதர்லாந்து நிராகரித்தது.
உர்கிஸ்தான் மாகாணத்தில் இந்த இராணுவம் மிக மோசமான தாக்குதல்களை எதிர்கொண்டது. இந்த இராணுவம் தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்தமை அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அரசாங்கத்தில் இணைந்திருந்த கட்சியொன்று அரசைவிட்டு வெளியேறுமளவிற்கு நிலைமை மோசமாகின.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமித் அல் கர்ஸாயி நெதர்லாந்து இராணுவம் நான்கு வருடங்களாக முன்னெடுத்த கடுமையான இராணுவ நடவடிக்கைகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானின் புனரமைப்புப்பணிகளில் நெதர்லாந்து பொறியியலாளர்கள் ஈடுபடுவதையும் பாராட்டினார்.
அதேநேரம் நெதர்லாந்து இராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதை தலிபான்கள் வரவேற்றனர். அத்துடன் ஏனைய நாடுகளின் படைகளும் விரைவாக வெளியேற வேண்டுமென்றும் தலிபான்கள் கோரிக்கை விடுத்தனர். ஆப்கானிஸ்தானின் 21 மாகாணங்களில் 09 மாகாணங்கள் தலிபான்கள் வசம் உள்ளன. அவற்றில் உர்கிஸ்தானும் ஒன்று.
அண்மைக்காலமாக இங்குள்ள நேட்டோ படைகள் மிக மோசமான இழப்புக்களை சந்திக்கின்றன. போதைவஸ்துப் பொருட்கள் தாராளமாகக் கிடைக்கும் உர்கிஸ்தான் மாகாணத்தில் தலிபான்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கின்றது. சுவிட்ஸ்லாந்தும் இங்கிருந்து படைகளை வாபஸ் பெற்றுவிட்டது.
நெதர்லாந்து வெளிநாட்டமைச்சர் இது குறித்துத் தெரிவிக்கையில், ஞாயிற்றுக்கிழமை எங்கள் படைகள் ஆப்கானிஸ்தானில் முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையை நிறுத்திக்கொண்டன. இன்று முதல் ஆரம்பமாகியுள்ள வாபஸ் பெறும் நடவடிக்கைகள் செப்டம்பருக்குள் நிறைவடையும். நான்கு 16 ரக விமானங்கள், ஐந்து ஹெலிகொப்டர்கள், மூன்று சினூக் விமானங்கள் உட்பட அனைத்து இராணுவ வாகனங்கள், விமானங்கள், தளபாடங்களும் ஆப்கானிஸ்தானிலிருந்து வாபஸ் பெறப்படுமென்றார். இப்படைகள் வாபஸ் பெறப்படுகின்றதால் உர்கிஸ்தான் மாகாணத்தில் அமெரிக்க படைகள் கடும் சவால்களை எதிர்கொள்ளலாம்.
0 commentaires :
Post a Comment