கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் சேதமடைந்த பெளத்த விகாரைகளையும், மட்டக்களப்பு நகரிலுள்ள மங்கள ராமய பெளத்த விகாரையையும் புனரமைத்து தருமாறு கேட்டு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பிரதம சங்கநாயக்கரும் மட்டக்களப்பு மங்கள ராமயவின் விகாராதிபதியுமான அம்பிட்டிய சுமணரத்தின தேரர் நேற்று மட்டக்களப்பு நகரில் சாகும் வரையிலான உண்ணா விரதமொன்றை ஆரம்பித்தார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றுக் காலை 6 மணிக்கு சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை இவர் ஆரம்பித்தார்.
பெளத்த மத வழிபாட்டுடன் கட்டில் ஒன்றின் மேல் இருந்து, சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை இவர் ஆரம்பித்தார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராமய பெளத்த விகாரையை புனரமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்தும் ஆனால் இதுவரை இவ்விகாரை புனரமைக்கப்படவில்லை.
0 commentaires :
Post a Comment