பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் வரலாறு காணாத வெள்ளச் சேதத்திலிருந்து மக் களை மீட்க இந்தியா தரும் சுமார் 2,500 கோடி ரூபாய் உதவியை வாங்கிக் கொள்வது என்று முடிவு செய்துவிட்ட பாகிஸ்தான் அந்த உதவியை எந்த வடிவில் பெறுவது, எங்கே பெறுவது, எப்படிப் பெறுவது என்பதையெல்லாம் இன்னமும் தீர்மானிக்காமல் இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு வந்து வெள்ளச் சேத மீட்பு, நிவாரண உதவிகளைச் செய்ய விரும்பும் தன்னார்வத் தொண்டு நிறுவனங் களுக்கும் பிற நாடுகளைச் சேர்ந்த தொண்டர்களுக்கும் தாராளமாக விசா அளிக்குமாறு வெளிநாடுகளில் உள்ள தன் னுடைய தூதரகங்களுக்குத் தகவல் அனுப் பியிருக்கும் பாகிஸ்தான் அதிலும் ஒரு விஷமம் செய்திருக்கிறது. இந்தியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனி நபர்களுக்கும் அமைப்புகளுக்கும் விசா தர வேண்டாம் என்றும் கூறியிருக்கிறது.
இஸ்ரேலையும் இந்தியாவையும் ஒரே தட்டில் வைத்ததன் மூலம் இந்தியாவை எதிரியாகவே பாகிஸ்தான் கருதுவதைப், புரிந்துகொள்ள முடிகிறது.
இருந்தும் நெருக் கடியான இந்தத் தருணத்தில் பகைமையைப் பாராட்டக் கூடாது என்ற விவேகம் கூட பாகிஸ்தான் ஆட்சியாளர்களிடம் இல்லை என்பதையே இந்த விசா உத்தரவு காட்டுகிறது.
பாகிஸ்தானில் இப்போது நேரிட்டுள்ள வெள்ளச் சேதத்தை சர்வதேச அமைப்புகள் மதிப்பிட்டு வருகின்றன; என்ன சேதம் ஏற்பட்டது, என்னென்ன தேவைப்படுகிறது என்ற பட்டியல் தயாரானதும், இந்தியாவால் எந்த வகையில் உதவ முடியும் என்று பார்த்து உதவிகள் கேட்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி அப்துல் பாசித், இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
பாகிஸ்தானில் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வீடுகளைவிட்டு வெளியேற நேர்ந்திருக்கிறது. சுமார் 2 கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வந்த வுடனேயே பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி யைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்தியாவின் கவலையைத் தெரிவித்ததுடன், என்ன உதவிகள் தேவை என்றாலும் உடனே அளிக்கத் தயார் என்றார். உங்கள் உதவும் மனப்பான்மைக்கு நன்றி, தேவைகளைப் பிறகு சொல்கிறேன் என்று அப்போது பதில் அளித்தார் கிலானி.
அதன் பிறகு அமெரிக்கா நெருக்கிய தால்தான் இந்தியாவிடம் உதவிகளைப் பெற பாகிஸ்தான் சம்மதித்தது என்று செய்தி ஊடகங்கள் விஷமப் பிரசாரம் செய்தன. இது பாகிஸ்தான் அரசில் செல்வாக்கு பெற்றுள்ள இராணுவ, ஐ. எஸ். ஐ. வட்டாரங்களின் வேலை என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். நெருக்கடியான இந்த நேரத்தில் கூட இந்தியாவிடம் பாகிஸ்தான் நெருங்கிவிடக் கூடாது என்பதில் அவை எச்சரிக்கையாக இருப்பதையே இந்தச் செய்தி திரிப்பு உணர்த்துகிறது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை அமைப்பின் மூலம் இந்தியா தனது உதவியை அளிக்கலாம் என்றே பாகிஸ்தான் கூறக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
ஆனால் பாகிஸ்தானுடன் நெருங்கிய நில எல்லை உடையதும் சாலைகள், ரயில் பாதைகள், கடல் வழி, ஆகாய வழி என்று எல்லா, வகையிலும் பாகிஸ்தானுக்கு உதவக் கூடிய நிலையில் இருப்பது இந்தியாதான் என்பதால், இந்தியாவிடமே உதவிகளைக் கேட்டுப் பெறலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ் தானிடம் கூறுகின்றன. ஆனால் பாகிஸ்தான் தான் இன்னமும் தயக்கத்தைவிட்டு உதவிகளைப் பெற முன்வரவில்லை.
இதற்கிடையே பாகிஸ்தான் பத்திரிகைகளில் சில ஜீலம், சீனாப் ஆறுகளில் இந்தியா திடீரென தண்ணீர் திறந்துவிட்டதால்தான் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது என்று கூட அபாண்டமாக செய்திகளை வெளியிட்டன.
0 commentaires :
Post a Comment