மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் மானிய அடிப்படையில் 80, இரண்டு சக்கர உழவு இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருப்பதாக மாவட்ட கமநல அபிவிருத்தி பிரதிப் பணிப்பாளர் ஆர். லூசாந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் ஒவ்வொன்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த உழவு இயந்திரங்கள் இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்படவுள்ளன.
செலுத்தப்பட வேண்டிய இரண்டரை இலட்சம் ரூபாவையும் தவணை அடிப்படையில் செலுத்தும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
0 commentaires :
Post a Comment